»   »  தூங்கா வனத்தை வெளியிடும் எஸ்கேப்... டிவி உரிமை சன்னுக்கு!

தூங்கா வனத்தை வெளியிடும் எஸ்கேப்... டிவி உரிமை சன்னுக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன் நடித்து தயாரித்துள்ள 'தூங்கா வனம்', தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என வெளியாகிறது.

இரண்டும் தனித் தனி நேரடிப் படங்கள்.


படத்தின் தியேட்டர் உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் கமல் ஹாஸனைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்துவிட்டு வந்தார் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.


Kamal gave Thoongavanam TV rights to Sun TV

இந்த நிலையில் 'தூங்காவனம்' டிவி ஒளிபரப்பு உரிமையை பெரும் தொகைக்கு கேட்டது விஜய் டி.வி. ஆனால் தெலுங்கு உரிமையையும் சேர்த்து பெரிய விலைக்கு வாங்க வேண்டும் என்று கமல் நிபந்தனை போட சைலன்டாகி விட்டது விஜய் டிவி.


விஜய் டிவியுடன் பேசிக் கொண்டிருந்த போதே, சன் டிவியுடனும் பேரம் பேசிய கமல், சத்தமின்றி இரு மொழி உரிமைகளையும் சன்னுக்கே கொடுத்துவிட்டார்.


இதை எதிர்ப்பார்க்காத விஜய் டிவி செம அப்செட்டாம்!

English summary
Kamal Hassan has sold the theatrical to Escape Artist Madhan and gave the TV rights to Sun TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil