உங்கள கேட்கவே இல்லையே... அபிஷேக்கிற்கு நோஸ்கட் கொடுத்த கமல்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 21 வது நாளை எட்டி உள்ளது.
கமல் வரும் வார இறுதி எபிசோடின் இரண்டாவது நாளான இன்று கேப்டன்சி டாஸ்க் பற்றி கமல் பேச துவங்கினார். அப்போது ராஜுவை ஏன் கேப்டனாக தேர்வு செய்யவில்லை. முதலில் அவர் கழுத்தில் மாலையை போட்டு விட்டு, எதற்காக சிபி கழுத்திற்கு மாற்றினீர்கள் என கேட்டார்.

கேள்வி கேட்ட கமல்
யாரெல்லாம் மாலையை மாற்றினீர்கள், எதற்காக மாற்றினீர்கள் என கேட்டார். இதற்கு முதலில் வருண், நிரூப் ஆகியோர் தங்கள் தரப்பு விளக்கங்களை கூறினர். அவர்களிடம் அதற்கு கமல் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் மாற்றவேயில்லை
அப்போது குறுக்கிட்ட அபிஷேக், இல்லை சார். சிபி அனைத்திலும் நேரத்தை கடைபிடித்து சரியாக இருப்பான். அவன் கேப்டன் ஆனால் வீட்டில் அனைத்தும் ஒழுங்காக நடக்கும் என்பதால் தான் அவருக்கு மாலை போட்டேன். நான் மாலையை ஒரு முறை கூட மாற்றவில்லை என்றார்.

உங்கள நான் கேட்கவேயில்லையே
உங்களை நான் கேட்கவே இல்லையே. மாலையை யார் மாற்றினீர்கள் என்று தான் நான் கேட்டேன். நீங்கள் எதற்காக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார் கமல். கமலின் இந்த பேச்சை பலரும் வரவேற்றுள்ளனர்.

சரியான நோஸ்கட்
அபிஷேக்கிற்கு சரியான நோஸ்கட் என ரசிகர்கள் பலர் பாராட்டி உள்ளனர். ஏற்கனவே ஏராளமானோர் அபிஷேக்கிற்கு எதிராக கருத்து பதிவிட்டு, டிரோல் செய்து வருகின்றனர். இந்த வாரம் கமல் வரம் எபிசோட் துவங்குவதற்கு முன்பே பிரியங்கா மற்றும் அபிஷேக்கை கேள்வி கேளுங்கள் என பலர் கோரிக்கை வைத்திருந்தனர்.

அபிஷேக்கை கண்டித்த கமல்
இதற்கு ஏற்ற மாதிரி கமலும் நேற்றைய எபிசோட்டில், பிரியங்கா காற்றில் எழுதிக்காட்டியது, பகலில் தூங்கியதை கண்டித்தார். அதே போல் அபிஷேக் விளையாடி விதம் உள்ளிட்ட பலவற்றை வன்மையாக கண்டித்தார்.

வரவேற்ற ரசிகர்கள்
கமல் வெளிப்படையாக கேள்வி கேட்டதை ரசிகர்கள் பலர் வரவேற்றனர். நெட்டிசன்கள் இதற்காக கமலுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த வாரம் அபிஷேக் தான் வெளியேற போகிறார் என கூறப்பட்டு வரும் நிலையில், அபிஷேக்கிற்கு கமல் நோஸ் கட் கொடுத்ததை அனைவரும் ரசித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











