கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல், இளையராஜா... என்ன சொல்லிருப்பாங்க ?

சென்னை : நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா இருவரும் இன்று கேஜிஎஃப் 2 படம் பார்த்துள்ளனர். படத்தை பார்த்த பிறகு இவர்களின் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும், என்ன கமெண்ட்ஸ் சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

கன்னட டைரக்டரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக்கிங் ஸ்டார் நடித்த படம் கேஜிஎஃப். 2018 ம் ஆண்டு வெளிவந்த கேஜிஎஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் 2 படத்தை இயக்கி உள்ளனர். இந்த படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

 தரமான படம்

தரமான படம்

உலகம் முழுவதும் 10,000க்கும் அதிகமான தியேட்டர்களில், 5 மொழிகளில் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த பலரே தரமான படம் என சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். கேஜிஎஃப் 2 டீம், பிரசாந்த் நீல், யாஷ் என அனைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

1000 கோடியை கடந்து விட்டதா

1000 கோடியை கடந்து விட்டதா

கேஜிஎஃப் 2 ரிலீசான 14 நாட்களில் உலகம் முழுவதும் 970 கோடிகளை வசூல் செய்துள்ளது. இன்று அல்லது நாளை 1000 கோடி வசூல் கிளப்பில் கேஜிஎஃப் 2 படமும் இணைய உள்ளது. ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் 15 நாட்களில் 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. தற்போது கேஜிஎஃப் 2 அந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பார்க்க தான் அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கேஜிஎஃப் 2 படம் இந்தியாவில் மட்டும் 736 கோடிகளை வசூல் செய்துள்ளது.

கேஜிஎஃப் 3 ஆரம்பிச்சுட்டாங்களா

கேஜிஎஃப் 3 ஆரம்பிச்சுட்டாங்களா

மிக விரைவில் அதிக தொகையை வசூல் செய்துள்ள டாப் 5 இந்திய படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 2 படமும் இணைந்துள்ளது. இந்நிலையில் கேஜிஎஃப் 3 படமும் இயக்க போவதாக பிரசாந்த் நீல் சமீபத்தில் அறிவித்தார். ஆனால் கேஜிஎஃப் 3 படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக படத்தின் ஹீரோவான யாஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதனால் மிக விரைவிலேயே கேஜிஎஃப் 3 படமும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி இறந்து விடுவதை போல் காட்டப்படுவதால் கேஜிஎஃப் 3 ஹீரோயின் யாராக இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இளையராஜாவுடன் கேஜிஎஃப் 2 பார்த்த கமல்

இளையராஜாவுடன் கேஜிஎஃப் 2 பார்த்த கமல்

இப்படி உலக ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாறி உள்ள கேஜிஎஃப் 2 படத்தை உலக நாயகன் கமல்ஹாசனும், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்து சென்று, இன்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பார்த்துள்ளனர். தியேட்டர் உரிமையாளர், இவர்கள் இருவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப் 2 க்கும் கமலுக்குமான தொடர்பு

கேஜிஎஃப் 2 க்கும் கமலுக்குமான தொடர்பு

கேஜிஎஃப் 2 படத்திற்கு ஸ்டண்ட் அமைத்துள்ள அன்பறிவு தான், கமல் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் படத்திற்கும் ஸ்டண்ட் அமைத்துள்ளனர். அதோடு, அனைவரும் பாராட்டும் கேஜிஎஃப் 2 படம் பற்றிய கமல் என்ன கமெண்ட்ஸ்/விமர்சனம் கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் தான் கேஜிஎஃப் 2 படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X