twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேசியாவில் மாஸ் காட்டும் கமல்.. உலகளவில் எத்தனை ஸ்க்ரீன்களில் விக்ரம் வெளியாகப் போகுது தெரியுமா?

    |

    சென்னை: விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில், உலகளவில் அதிக திரையரங்குகளில் அந்த படத்தை வெளியிட கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கேரளா என விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக தானே நேரடியாக பல இடங்களுக்கு சென்று பத்திரிகையாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார் கமல்ஹாசன்.

    இந்நிலையில், அடுத்தபடியாக மலேசியாவில் தற்போது விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக சென்றுள்ள கமலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

    36 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு செய்திருக்கிறாரா கமல்... விக்ரம் சுவாரஸ்யங்கள் 36 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு செய்திருக்கிறாரா கமல்... விக்ரம் சுவாரஸ்யங்கள்

    பிரம்மாண்ட புரமோஷன்

    பிரம்மாண்ட புரமோஷன்

    இதுவரை இல்லாத அளவுக்கு விக்ரம் படத்தின் மீது கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ள நிலையில், பெரியளவில் பிரம்மாண்டமாக புரமோஷன்களை நடத்தி வருகிறார். சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புரமோஷன் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

    மலேசியாவில் கமல்

    மலேசியாவில் கமல்

    ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தை புரமோட் செய்த கமல் தற்போது தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவுக்கு சென்றுள்ளார். டி.எம்.ஓய். நிறுவனத்தின் ஏற்பா​ட்டில் "விக்ரம்" திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக கமலஹாசன், காலை 9 மணியளவில் சிப்பாங், அனைத்துலக விமான நிலையத்திற்கு மாஸாக வந்திறங்கிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

    மலேசிய ரசிகர்களுடன்

    மலேசிய ரசிகர்களுடன்

    பத்துக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களுடன் பலத்த பாதுகாப்புக்கு இடையில் விமான நிலையத்திலிருந்து கமலஹாசன் அழைத்து வரப்பட்டா​​ர். இன்று பிரிக்பீல்ட்ஸ் ​நூ சென்டர் திரையரங்கில் "விக்ரம்" திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்படவிருக்கிறது. பத்திரையாளர்கள் மற்றும் பிரமுகர்களுக்காக திரையிடப்படவிருக்கும் " விக்ரம்" டிரைலர் காட்சியை கமலஹாசனும் கண்டு களிப்பார். அதற்கு முன்னதாக நடைபெறும் பத்தி​ரிகையாளர் சந்திப்பில் கமலஹாசன் கலந்து கொள்ளவிருக்கிறார். அதேவேளையில் தனது அபிமான ரசிகர்களையும் சந்தி​த்து கமலஹசான் உரையாடவிருக்கிறார்.

    சூர்யா போகல

    சூர்யா போகல

    மலேசியாவுக்கு கமல்ஹாசன் உடன் நடிகர் சூர்யாவும் விக்ரம் படத்தின் புரமோஷனுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா 41 மற்றும் வாடிவாசல் படங்களில் பிசியாக இருப்பதால் சூர்யா மலேசியாவுக்கு செல்லவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    5000 ஸ்க்ரீன்களில்

    5000 ஸ்க்ரீன்களில்

    உலகளவில் விக்ரம் படத்தின் முதல் நாள் காட்சி 5000 ஸ்க்ரீன்களில் திரையிட உள்ளன. அதற்கான பணிகளை ராஜ்கமல் நிறுவனம் மின்னல் வேகத்தில் செய்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் நடித்துள்ள இந்த படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில்

    தமிழ்நாட்டில்

    நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் 900 திரையரங்குகளில் வெளியானதை போலவே கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படமும் தமிழ்நாட்டில் 900 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

    இந்தியிலும் அதிகம்

    இந்தியிலும் அதிகம்

    விக்ரம் ஹிட்லிஸ்ட் என்கிற டைட்டிலுடன் இந்தியில் வெளியாகும் விக்ரம் படம் அதிகபட்சமாக 1500 ஸ்க்ரீன்களில் ரிலீசாக போவதாக கூறுகின்றனர். மேலும், கேரளாவில் 400 ஸ்க்ரீன்களில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்யப் போவதும் கன்ஃபார்ம் ஆகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் ப்யூர் பான் இந்தியா படமாக விக்ரம் வெளியாகப் போகும் நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக விக்ரம் மாறும் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

    English summary
    Kamal Haasan arrives at Malaysia for Vikram movie promotion and his movie Vikram will plans to release over 5000 screens worldwide and it will expected to collect more on Day 1 itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X