Bigg Boss Tamil 6: தனலட்சுமியை தாளித்துக் கொட்டிய கமல்ஹாசன்.. என்ன இப்படி ஆகிடுச்சே!

சென்னை: 2வது ப்ரோமோவாக இதையே போட்டிருக்கலாம், தப்பு பண்ணிட்டீங்க பிக் பாஸ் டீம் என 3வது ப்ரோமோவை பார்த்து ஃபீல் செய்து வரும் அளவுக்கு தரமான சம்பவம் அரங்கேறி இருக்கு.

எப்படியோ விக்ரமனை பாராட்டி சேவ் செய்யும் காட்சிகள் தான் 3வது ப்ரோமோவில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என தனலட்சுமிக்கு கமல் கிளாஸ் எடுத்த காட்சிகள் நிறைவை தந்துள்ளன.

தனலட்சுமி தனது கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என இந்த வாரம் ஏற்கனவே ஹவுஸ்மேட்கள் அட்வைஸ் செய்த நிலையில், அதை கையில் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

கடந்த வாரம் ஹேப்பி

கடந்த வாரம் ஹேப்பி

கடந்த வாரம் கமல் குறும்படம் போட்டவுடனே உலக கோப்பையே ஜெயித்து விட்டது போல அந்த அளவுக்கு துள்ளிக் குதித்து கொண்டாடிய தனலட்சுமி இந்த வாரம் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளார். ஷெரினா பண்ண வேலை காரணமாக அவர் இந்த வாரம் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்த வாரம் தனலட்சுமி நாமினேஷனில் வருவது உறுதி.

கோபத்தை குறைக்கணும்

கோபத்தை குறைக்கணும்

கோபப்படாதே என யாராவது சொன்னால், அதை சொல்ல நீயாருன்னு எகிறி கொண்டு மேலும், கோபமடைந்து சண்டைக்கு வருவது ஏன் தனலட்சுமி என்பதை கமல்ஹாசன் இந்த வாரம் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

தாளித்துக் கொட்டிய கமல்

தாளித்துக் கொட்டிய கமல்

தனலட்சுமியை எந்தளவுக்கு தாளித்துக் கொட்ட முடியுமோ அந்த அளவுக்கு தாளித்துக் கொட்டியுள்ளார் கமல்ஹாசன். எதுக்கு என்ன பார்த்து கோபப்படுறீங்கன்னு கேட்டா? இல்லைம்மா நீங்க கோபத்தை குறைக்கணும்னு சொன்னா? இல்லை நான் கோபப்படுவேன்.. என்னை கோபப்படக் கூடாதுன்னு நீங்க எப்படி சொல்லலாம் என சண்டை பிடிக்கிறீங்களே ஏன் என சும்மா வெளுத்து வாங்கி விட்டார்.

என்னவெறி மாப்பிள்ளைக்கு

என்னவெறி மாப்பிள்ளைக்கு

தனலட்சுமியை கமல் வறுத்தெடுத்து எடுத்து வருவதை பார்த்ததும் ஆடியன்ஸ் சொல்லி வச்ச மாதிரி அப்படி கைதட்டி ரசிப்பதை பார்த்த நெட்டிசன்கள் என்னவெறி மாப்பிள்ளைக்கு என கலாய்த்து வருகின்றனர். அடுத்த வாரம் நல்லா கேம் ஆடிக்கிட்டு இருக்கிற தனலட்சுமியையும் அமைதியான அசீம் மாதிரி மாத்தி வைக்கப் போறீங்களா பிக் பாஸ் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X