»   »  போத்தீஸ் நிறுவன விளம்பரத்தில் கமல்... எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நிதி

போத்தீஸ் நிறுவன விளம்பரத்தில் கமல்... எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விளம்பரங்களில் நான் நடித்தால் அந்த வருமானத்தை எய்ட்ஸ் நோயினால் பாதித்த குழந்தைகளுக்கு வழங்குவேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இப்போது போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

55 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், நடிகர் கமலஹாசன் விளம்பரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கமல் நடித்த விளம்பரங்கள் வெளியாக உள்ளன.

போத்தீஸ் விளம்பரம்

போத்தீஸ் விளம்பரம்

60 வயதாகும் நடிகர் கமல்ஹாசன் இதுவரை எந்த வர்த்தக விளம்பரத்திலும் தோன்றியது இல்லை. அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தற்போதுதான் முதல் முறையாக போத்தீஸ் ஜவுளி நிறுவன விளம்பரத்தில் நடித்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிடப்படவுள்ள விளம்பரங்களில் நடிகர் கமலஹாசன் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் தொடங்கியது.

ஜிப்ரான் இசை

ஜிப்ரான் இசை

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் படமாக்கப்படும் இந்த விளம்பரங்களுக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீப காலமாக கமல் நடித்து வரும் திரைப்படங்களுக்கு ஜிப்ரான்தான் இசையமைத்து வருகிறார்.

சிவகார்த்திக்கேயன் டூ கமல்

சிவகார்த்திக்கேயன் டூ கமல்

நயன்தாரா, சிவகார்த்திக்கேயன் ஆகியோர் கடந்த காலங்களில் போத்தீஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்துள்ளனர். பலகோடி செலவு செய்து கமல்ஹாசனை விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது போத்தீஸ் நிறுவனம்.

முயற்சி கைகூடியது

முயற்சி கைகூடியது

கடந்த இரண்டு ஆண்டு காலமாக எங்கள் நிறுவன விளம்பரங்களில் கமலஹாசனை நடிக்க வைக்க முயற்சித்து வந்தோம். இப்போதுதான் அதற்கான காலம் கனிந்துள்ளது என்று கூறியுள்ளார் போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ். ரமேஷ்.

குழந்தைகளுக்கு நிதி

குழந்தைகளுக்கு நிதி

விளம்பரத்தில் நடிக்க கமலுக்கு எவ்வளவு தொகை சம்பளமாக வழங்கப்பட்டது? என்று ரமேஷ் தெரிவிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கமல் அளித்த பேட்டி ஒன்றில்,'' விளம்பரங்களில் தான் நடிக்கத் தொடங்கினால் அதில் இருந்து கிடைக்கும் வருவாயை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக செலவழிப்பேன்'' என்று தெரிவித்திருந்தார். இந்த விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு நிதியாக கமல்ஹாசன் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor-filmmaker Kamal Haasan will, for the first time in his career, endorse textile showroom brand Pothys. Kamal Haasan years before told that he might start acting in commercials and will use the money earned through them for the benefits of HIV positive children.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil