For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அர்ச்சனாவை தலைவராக்க சா பூ த்ரி ஆட சொன்ன கமல்.. சனம் சத்தியமா தலைவர் பதவிக்கு லாயக்கில்லை!

  |

  சென்னை: எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை அறிமுகப்படுத்தி, ஆஜீத்தை காப்பாற்றி விட்டார் பிக் பாஸ்.

  இந்த வாரம் யாருமே வெளிய போகமாட்டாங்கன்னு ரசிகர்கள் ஆஜீத்தை விட முன்னாடியே ஆருடம் பார்த்து விட்டதால், சன் டே ஷோ நிறையவே கடுப்பை கிளப்பியது.

  அடுத்ததாக இந்த வார தலைவரை தேர்வு செய்ய கமல் சொன்ன விளையாட்டுக்களை கண்ட ரசிகர்கள் காண்டே ஆகிட்டாங்க..

  4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை!

  ஆஜீத் சேவ்டு

  ஆஜீத் சேவ்டு

  ஆஜீத்தை குட்டி ஜோசியர் ஆக்கி, ஒரு வேளை நம்ம மொட்டை பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியே வெளியே போய்டுவாரோன்னு ரசிகர்களை ஏமாற்ற பிக் பாஸ் போட்ட நாடகத்தை மக்கள் ஒரு சதவீதம் கூட நம்பவில்லை. இந்த வாரம் ஆஜீத் தான் எவிக்‌ஷனில் வருவார் அவருக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் என்பது தெளிவாகவே தெரிகிறது.

  கேமராவுக்கு பின்னாடி

  கேமராவுக்கு பின்னாடி

  ஆஜீத் உங்க கிட்ட அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருக்கா, அதை எடுத்துட்டு வாங்க என கமல் சொன்னதும், பாலாஜி கூடவே போய், ஸ்பீக்கர் பாக்ஸ் பின்னாடி ஒளித்து வைத்திருந்த அந்த அலாவுதீன் பூதத்தை எடுத்து வந்து தப்பித்து விட்டார். அவர் தப்பித்த உடனே, கூடவே சுரேஷ் மற்றும் அனிதாவும் சேவ் ஆனார்கள்.

  3 வாரமா 16 பேர்

  3 வாரமா 16 பேர்

  பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து 3 வாரமா 16 பேரை வச்சு ஷோ ஓடுறதை பார்த்த ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். நல்ல ஒரு பிசிக்கல் டாஸ்க், வார வாரம் ஒருவரை வெளியே அனுப்பி விளையாட்டை சுவாரஸ்யப்படுத்துங்க என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  சா பூ த்ரி

  சா பூ த்ரி

  அதன் பின்னர் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் முக்கியமான விஷயத்துக்கு கமல் வந்தார். அர்ச்சனா, பாலாஜி, சனம் ஷெட்டி இந்த மூன்று பேரில் தலைவரை தேர்ந்தெடுக்க சூப்பரான ஒரு கேம் விளையாட போகிறோம் என சொல்லிபுட்டு, சா பூ த்ரி போடுங்க என கமல் சொன்னதும் எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

  மொக்கை கேம் விமர்சனம்

  மொக்கை கேம் விமர்சனம்

  முதல் சீசனில் நடத்தப்பட்ட நாடா? காடா? டாஸ்க்கை மறுபடியும் நடத்தியது. பவுலுக்குள்ள பால் போடுறது, மியூசிக்கல் சேர் என மொக்கை கேம்களை பிக் பாஸ் இந்த முறை போட்டியாளர்களுக்கு கொடுப்பதை பார்த்து காண்டான ரசிகர்கள், அது குறித்த விமர்சனங்களை வைத்த நிலையில், அதை விட மோசமான சா பூ த்ரி, டாஸ் போடுறது, இங்கி பிங்கி பாங்கி என கொஞ்சம் சதாய்ச்சார் கமல்.

  அதுக்கு லாயக்கில்லாத சனம்

  அதுக்கு லாயக்கில்லாத சனம்

  சா பூ த்ரின்னா என்னன்னு கூட தெரியாமல் சனம் ஷெட்டி தமிழ் நாட்டில் எப்படித் தான் 22 படங்கள் நடித்தாரோ தெரியவில்லை என நேற்றைய எபிசோடை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். நிகழ்ச்சியிலேயே அவரை மரண பங்கம் பண்ண கமல், நீங்க சத்தியமா தலைவர் பதவிக்கு லாயக்கில்ல எனக் கூறினார்.

  தலைவரான அர்ச்சனா

  தலைவரான அர்ச்சனா

  சா பூ த்ரி கேமோ அல்லது டாஸ் போட்டு விளையாடி இருந்தால் கூட பாலாஜி முருகதாஸ் தலைவராக ஆகியிருப்பார். ஆனால், அதை விட்டுவிட்டு, ஜால்ரா தட்டும் ஹவுஸ்மேட்களிடம் அந்த பொறுப்பை கமல் விட்டதுமே, அர்ச்சனாவுக்கு எல்லாரும் கை தூக்கி அவரை இந்த வாரம் தலைவராக ஆக்கி விட்டனர். காலக் கொடுமை.

  புகார் கடிதம் என்னாச்சு?

  புகார் கடிதம் என்னாச்சு?

  ரம்யா பாண்டியனை போலவே ரியோவுக்கு எதிரான புகார் கடிதத்தையும் கமல் படிக்கவில்லை. ஹவுஸ்மேட்களை ஒன்றாக அமர வைத்து சாப்பிட சொன்னார் என்கிற ஒரே ஒரு பாராட்டை சொல்லிவிட்டு அப்படியே அர்ச்சனாவை தலைவர் ஆக்கிட்டார் கமல். இந்த வாரம் அர்ச்சனாவின் ஆட்டம் இன்னும் அதிகமா இருக்குமா? பார்க்கலாம்.

  English summary
  Archana selected as this week leader to the Bigg Boss 4 house. Before that Kamal teasing the contestants with a super intellectual games like Sa Poo Three and Inky Pinky Ponky.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X