இனியும் விளையாடலைன்னா வீட்டுக்கு போக வேண்டியது தான்.. பெரிய இடத்து பிள்ளைகளுக்கு கமல் அட்வைஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேறிய நிலையில், அடுத்த வாரம் அபிநய் தான் வெளியேற போகிறார் என இப்போதே பலரும் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ள நிலையில், கமல் கொடுத்த திடீர் அட்வைஸ் ஆட்டத்தை மாற்ற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

பெரிய இடத்து பிள்ளைகளான அபிநய் மற்றும் வருண் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

ஆனால், இதுவரை பெரியளவில் இருவரும் எந்தவொரு பங்களிப்பையும் கொடுக்கவில்லை.

குறைவான ஓட்டுகள்

குறைவான ஓட்டுகள்

நாமினேஷனில் இடம்பெற்ற 7 பேரையும் தனியாக ஆபிஸ் ரூமிற்கு அழைத்து சென்று ஏதோ வித்தியாசம் காட்ட பிக் பாஸ் குழு முயற்சித்தது. பிரியங்கா, அக்‌ஷரா, சுருதி, பாவனி உள்ளிட்ட 4 போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சேவ் ஆகி வீட்டுக்குள் வந்தனர். குறைவான ஓட்டுக்களை பெற்ற மூவர் மட்டும் அதே ரூமில் இருந்தனர்.

சின்ன பொண்ணு வெளியேற்றம்

சின்ன பொண்ணு வெளியேற்றம்

அதில், சின்ன பொண்ணு தான் மிகவும் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளார் எனக் கூறி அவரை இந்த வாரம் கமல் வெளியேற்றி விட்டார். சின்ன பொண்ணுவுக்கு அடுத்த இடத்தில் அபிநய் இருக்கிறாரா? அல்லது வருண் இருக்கிறாரா? என்பதை கமல் சொல்ல மறுத்து விட்டார்.

பெரிய இடத்து பிள்ளைகள்

பெரிய இடத்து பிள்ளைகள்

நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் மற்றும் காதல் மன்னன் ஜெமினி கணேசன் பேரன் அபிநய்யும் கடைசியாக இருந்த நிலையில், கமல் இருவருக்கும் ஒரு தரமான அட்வைஸ் கொடுத்தார். நீங்கள் வெளிவர வேண்டும். உங்கள் விளையாட்டை சிறப்பாக விளையாட வேண்டும் என இருவருக்கும் தெளிவாக புரியும் படி எடுத்துக் கூறினார்.

வருண் ஓகே

வருண் ஓகே

பாவனி மற்றும் சுருதியுடன் சண்டை போட ஆரம்பித்து வருண் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் விளையாட ஆரம்பித்துள்ளார் என்றே தெரிகிறது. மேலும், அவரிடம் இருக்கும் நீர் காயின் அவரை நிச்சயம் காப்பாற்றும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அடுத்த வாரமும் வருண் சேவ் ஆகிவிடுவார்.

அபிநயை காப்பாற்ற

அபிநயை காப்பாற்ற

காயினும் இல்லாமல் கண்டபடி திட்டிய பாவனியிடமே குட்டிப் போட்ட பூனை போல மீண்டும் மீண்டும் சுற்றி வரும் அபிநயை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய நடிகராக மாறிவிடலாம் என்கிற கனவோடு வந்தவர் என்ன எந்த ஆட்டத்தையும் ஆடாமல் இருக்கிறாரே என பிரியங்காவுக்கு கடந்த வாரம் கமல் அட்வைஸ் கொடுத்தது போல இந்த வாரம் அபிநயை காப்பாற்றவே இப்படியொரு அட்வைஸை கொடுத்துள்ளார் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். புரிந்து தெளிந்து விளையாடுவாரா அபிநய்? அல்லது அடுத்த வாரம் வீட்டுக்கு கிளம்பிடுவாரா? என்பதை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X