twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காந்தியை விமர்சித்தவன் நான்..மன்னிப்பு கூறவே ஹே ராம் படம் எடுத்தேன்..மனம் திறந்த கமல்ஹாசன்!

    |

    சென்னை : மகாத்மா காந்தியிடம் மன்னிப்பு கேட்கவே ஹே ராம் படம் எடுத்தேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    150 நாட்களுக்கு மேல் பாதயாத்திரை சென்றுள்ள ராகுல் காந்தி கடந்த வாரம் 24-ந் தேதி, டெல்லியில் பாதயாத்திரை நடத்தினார். அதில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் கலந்து கொண்டார்.

     படமே ஓடலைன்னு சொன்னார் அஜித்... கமல் அப்படியே பதறிட்டார்: மனம் திறந்த பிரபலம் படமே ஓடலைன்னு சொன்னார் அஜித்... கமல் அப்படியே பதறிட்டார்: மனம் திறந்த பிரபலம்

    கலந்துரையாடல்

    கலந்துரையாடல்

    பாதயாத்திரைக்கு பின் ராகுல்காந்தி கமல்ஹாசன் தனியாக சந்தித்து பல விஷயங்கள் குறித்து பேசினார்கள். இருவரும் நடத்திய உரையாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், ராணுவம், நாட்டின் பாதுகாப்பு, சினிமா என பல விஷயங்கள் குறித்து இருவரும் மனம் திறந்து பேசி உள்ளனர்.

    கடுமையாக விமர்சித்தேன்

    கடுமையாக விமர்சித்தேன்

    அப்போது ஹே ராம் படம் குறித்து மனம் திறந்து பேசிய கமல், என் தந்தை ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தார்.ஆனால் நான் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்பவனாக இருந்தேன். என்னுடைய அப்பா ஒரு வழக்கறிஞராக இருந்த போதும் இதுகுறித்து என்னிடம் விவாதம் செய்ததே இல்லை. ஆனால், வரலாற்றை படி என்பார். என்னுடைய 24, 25 வயதில் தான் காந்தியை பற்றி புரிந்து கொண்டு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன்.

    இதற்காகத்தான் ஹே ராம் எடுத்தேன்

    இதற்காகத்தான் ஹே ராம் எடுத்தேன்

    ஹே ராம் திரைப்படத்தில் காந்தியை கொல்ல திட்டம் போடும் நபராக நடித்திருப்பேன். என் தவறை திருத்திக் கொள்ளவும், மன்னிப்பு கேட்கத்தான் 'ஹே ராம்' படத்தை உருவாக்கினேன். ஆனால், எவ்வளவு நெருங்கி சென்றதோ அந்த உண்மை தெரிய வருவதினால் அந்த கதாபாத்திரம் முற்றிலுமாக மாறிவிடும், அந்த கதாபாத்திரம் திருந்தியது தான் என்று ஹே ராம் படத்தின் கதை. என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்பதும் அதுதான் என்று கமல்ஹாசன் நெகிழ்ந்து கூறினார்.

    ஹே ராம்

    ஹே ராம்

    கமல்ஹாசன் இயக்கத்தில் ஹே ராம் திரைப்படம் 2000ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ஷாருக்கான்,கமல், ராணிமுகர்ஜி, வசுந்தரா தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ulaganayagan Kamal Haasan has opened up about Mahatma Gandhi’s influence on his life
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X