twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் கடவுள் போல… கேஜிஎப் வசனகர்த்தா அசோக் உருக்கம்

    |

    சென்னை : கேஜிஎப் 2 படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசாகி வரலாறு காணாத வெற்றி பெற்று எந்த ஒரு கன்னட படமும் செய்யாத பல சாதனைகளை செய்துள்ளது.

    இந்த படம் ஹிந்தியில் இதுவரை 100 கோடி வசூல் செய்து புதியதொரு அத்தியாயத்தை துவங்கியுள்ளது.

    கேஜிஎஃப் படத்தின் முக்கிய பலமாக இந்த படத்தின் வசனங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. தமிழில் வசனம் எழுதிய அசோக் இதற்கெல்லாம் காரணம் நடிகர் கமல் என குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் விமல் மீது அடுத்தடுத்து குவியும் பணமோசடி புகார்கள்...இப்போ யார் தெரியுமா? நடிகர் விமல் மீது அடுத்தடுத்து குவியும் பணமோசடி புகார்கள்...இப்போ யார் தெரியுமா?

    கமலின் உதவி இயக்குனர்

    கமலின் உதவி இயக்குனர்

    கலையின் மீது ஈர்ப்பு கொண்டு ஊரைவிட்டு சினிமாவில் சாதிக்க சென்னை வந்துள்ளார் அசோக். சென்னையில் வாய்ப்புகளுக்காக சுற்றும் சமயத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று அவர் முன் Mime நடிப்பை நடித்துக் காட்டும் வாய்ப்பு வர அதை சரியாக செய்து கமலின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அதன்பிறகு அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்து ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி போன்ற படங்களில் பணிபுரிந்து பிறகு அவரிடம் இருந்து வெளியே வந்து தனியாக படம் ஒன்றை இயக்கி உள்ளார் அசோக்குமார். அவர் இயக்கிய ஆயுள் ரேகை திரைப்படம் 2005ஆம் ஆண்டு ரிலீஸானது. ஆனால் அது தோல்வி படமாக அமைந்தது.

    புரோடக்சன் இல் இயங்கிய அசோக்

    புரோடக்சன் இல் இயங்கிய அசோக்

    அசோக் இயக்கிய ஆயுள்ரேகை படத்தின் தோல்விக்கு பிறகு ப்ரொடக்ஷன் இல் இறங்கிய அவர் தனது நண்பர் தயாரித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு ப்ரொடக்ஷனில் உதவி இருக்கிறார். புரொடக்ஷன் வேலை செய்தது மட்டுமல்லாமல் அதில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்தும் இருக்கிறார். விஜய் சேதுபதி அண்ணனாக வருபவர் இவரே. அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நாலு பேரும் நல்லா இருந்த ஊரும் படங்களின் ப்ரொடக்ஷனில் வேலை செய்திருக்கிறார். அந்த சமயத்தில் கேஜிஎப் 1 படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு இவரை தேடி வந்திருக்கிறது. இதற்கு ஒருவகையில் நடிகர் கமல் உதவி செய்திருக்கிறார் கமல்ஹாசனிடம் வேலை செய்திருக்கிறார் நன்றாக எழுதுவார் என நம்பி தரலாம் என அவர்கள் நம்பியது இவருக்கு இந்த வாய்ப்பு வர முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

    கே ஜி எஃப் பலம் வசனம்

    கே ஜி எஃப் பலம் வசனம்

    கே ஜி எஃப் 1 மற்றும் கேஜிஎப் 2 மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது படத்தின் வெற்றிக்கு பிரசாந்த் நில் இயக்கம், yash நடிப்பு, படத்தின் எடிட்டிங், இசை, கேமரா வேலைப்பாடு என பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக படத்தின் வசனங்கள் உள்ளன. " யாரோ 10 பேரை அடித்து நான்தான் டான் ஆகல. நான் அடிச்ச 10 பேரும் டான் தான்." எல்லா படத்திலேயும் ஒருத்தன் இருப்பான் இல்ல உன்ன பாத்தா அது மாதிரி இருக்கு, ஹீரோவா, இல்ல வில்லன்", " கேங்கை கூட்டிட்டு வர்றவன் கேங்ஸ்டர். ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்". போன்ற வசனங்களை எழுதி திரையரங்குகளில் ரசிகர்கள் விசில் அடிக்க காரணமாக இருந்திருக்கிறது.

    தொடர்ந்து கமல் பற்றிப் பேசும் அசோக்

    தொடர்ந்து கமல் பற்றிப் பேசும் அசோக்

    கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸுக்கு முன்பும் ரிலீசுக்கு பிறகும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் நேர்காணல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இதில் படத்தின் வசனகர்த்தா அசோக் கேஜிஎஃப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் முன்பு மறக்காமல் நடிகர் கமல்ஹாசன் பற்றி சிலாகித்துப் பேசி வருகிறார். ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது தொகுப்பாளர் அதையே ஒரு கேள்வியாக மாற்றி " நீங்கள் கமலை கடவுள் போல புகழ்கிறார்கள் " என கேட்க அதற்கு பதிலாக அசோக் " அது புகழ்வது அல்ல அது உண்மை. இப்போ நான் இங்க இருக்கேன் அது அவர் கிட்ட நான் கற்ற பாடம் தான். அவருடைய சினிமா அர்ப்பணிப்பை அருகிலிருந்து பார்த்தவன் எனது இந்த திறமைக்கு அவரே காரணம் " என நெகிழ்ச்சியுடன் இதை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    English summary
    Kamal Haasan is like god says KGF script Writer Ashok
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X