Don't Miss!
- News
உடைந்து கிடந்த வீட்டு ஜன்னல்.. வீட்டுக்குள் வந்த ஓனர் அம்மா.. பாத்டப்பில் கண்ட காட்சி.. கொடுமையே
- Sports
விராட் கோலியின் வீக்னஸ் இதுதான்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாம்பவான் கூறிய பலே ஐடியா.. தப்பிப்பாரா??
- Lifestyle
இந்த 4 ராசிக்காரர்களால் காதலில் ஏமாற்றாமல் இருக்க முடியாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“இளையராஜாவை பார்த்தால் பயமாக இருக்கும்”: DSP ஆல்பம் வெளியீட்டு விழாவில் கமல் சொன்ன ப்ளாஷ்பேக்
சென்னை: T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள பாடல் 'ஓ பெண்ணே.'
பான் இந்தியா பாடலாக உருவாகியுள்ள 'ஓ பெண்ணே' பாடல் வரிகளை எழுதி, இசையமைத்துள்ளதோடு தேவி ஸ்ரீ பிரசாத்தே இதில் நடித்துள்ளார்.
இந்தப் பாடலின் தமிழ் வெர்ஷனை செய்தியாளர்கள் முன்னிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.
பிக் பாஸ் சீசன் 6: யாரு ஆதாம்… அட்ராசிட்டியை தொடங்கிய ஜிபி முத்து… தலைசுற்றிப் போன கமல்!

பான் இந்தியா பால் சாங்
முன்னணி ஆடியோ நிறுவனமான டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் புதிய இண்டிபெண்டன்ட் சாங் உருவாகியுள்ளது. பான் இந்தியா பாடலாக உருவாகியுள்ள இதனை, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இயக்கியுள்ளார். 'ஓ பெண்ணே' எனத் தொடங்கும் இந்தப் பாடல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டைலில் பெப்பியாக உருவாகியுள்ளது. அவரே பாடல் வரிகளையும் எழுதி செம்மையாக ஆட்டம் போட்டு இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். ஓ பெண்ணே பாடலின் இந்தி வெர்ஷனை ரன்வீர் சிங்கும், தெலுங்கு வெர்ஷனை நாகார்ஜூனும் வெளியிட்டனர்.

தமிழில் கமல் வெளியீடு
இந்நிலையில், 'ஓ பெண்ணே' பாடலின் தமிழ் வெர்ஷனை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். அப்போது பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், "கமல் சாருக்கு எனது அன்பும் நன்றியும். நான் எது செய்தாலும் அவர்தான் எனக்கு உறுதுணையாகவும் உத்வேகம் கொடுக்கக் கூடியவராகவும் இருக்கிறார். இந்தப் பாடலின் ஐடியாவை முதன் முதலில் கமல் சாரிடம் தான் சொன்னேன். அவர் கொடுத்த உற்சாகத்தில் தான் ஓ பெண்ணே பாடலை முடிக்க முடிந்தது. அவருக்கு இசையின் மேல் இருக்கும் பிரியம் தான், எங்கள் இருவரையும் ஒன்றிணைத்தது. அதனால் தான் அவர் இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன்" என்றார்.

பாப் பாடல்கள் வரவேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், "சுயாதீன கலைஞர்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காக தான் கொரோனா காலத்தில் ராக்ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தினேன். இந்தப் பாடலின் நோக்கமும் சுயாதீனக் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்பதுதான். இனிவரும் சுயாதீனகலைஞர்களும் பல மொழிகளில் தங்கள் பாடல்களை உருவாக்க வேண்டும். பல மொழிகளை கற்றுக்கொண்டு, பல மொழிகளில் இசையமைக்க வேண்டும். இந்த பான் இந்தியன் பாப் ஆல்பத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. சமீபத்தில் இந்தியில் வெளியான இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. T Series-க்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். பூஷன் குமாருக்கும் எனது நன்றிகள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி" என பேசினார்.

தேவி ஸ்ரீ பிரசாத் பற்றி கமல்
இந்நிகழ்ச்சியில் பேசிய கமல், "தேவி ஶ்ரீ பிரசாத்தை பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதாகிறது எண்ணி வருத்தப்பட்டுள்ளேன். இவருக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை" எனக் கூறினார்.

சுயாதீனக் கலைஞர்களுக்கு ஆதரவு
மேலும், "இசையமைப்பாளார் எம்.எஸ் விஸ்வநாதனை சந்தித்து பேசிவிட்டு வந்தால் பெரிய சாமியாரை பார்த்துவிட்டு வந்த மாதிரி இருக்கும். ஆனா;, அதேநேரம் இளையராஜாவை பார்க்கச் சென்றால் பயம் தான் வரும். அவரிடம் பேசக் கூடாது, பாடல்களை மட்டும் வாங்கிவிட்டு வந்துவிட வேண்டும் என நினைத்து தான் செல்வேன். நானும் தேவிஸ்ரீ பிரசாத்தும் இளையராஜாவின் ரசிகர்கள்" என நெகிழ்ச்சியாகப் பேசினார்.