அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும் டி. ராஜேந்தர்.. நேரில் சந்தித்து நலம் விசாரித்த கமல்!

சென்னை: உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு இன்று டி ராஜேந்தர் செல்ல உள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் கமல்ஹாசன்.

Recommended Video

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்த இயக்குனர் டி ராஜேந்தர் பேட்டி

நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், டி. ராஜேந்தருக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுப்பதற்காக அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல அவரது மகன் சிம்பு முடிவெடுத்தார்.

அமெரிக்காவில் சிம்பு

அமெரிக்காவில் சிம்பு

அதற்கான ஏற்பாடுகளை செய்ய அவர் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நடிகை நயன்தாராவின் திருமணத்தில் சிம்பு கலந்து கொள்ளவும் இல்லை, அவருக்கு வாழ்த்தும் சொல்லவில்லையே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால், தனது அப்பா டி ராஜேந்தரின் ட்ரீட்மென்ட்டுக்காக பிசியாக இருந்து வருகிறார் சிம்பு.

டி. ராஜேந்தருக்கு என்ன பிரச்சனை

டி. ராஜேந்தருக்கு என்ன பிரச்சனை

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் டி. ராஜேந்தர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனாக எழுந்து நடமாடும் நிலைக்கு மாறியுள்ள அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். நடிகர் டி. ராஜேந்தரின் வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

முதலமைச்சர் சந்திப்பு

முதலமைச்சர் சந்திப்பு

ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நடிகர், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்ட டி. ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். லுங்கி அணிந்த நிலையில், முதலமைச்சரை சந்தித்ததும், உற்சாகமாக அவருடன் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

நேரில் சந்தித்த கமல்

நேரில் சந்தித்த கமல்

இந்நிலையில், டி ராஜேந்தர் இன்று அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். டி. ராஜேந்தர், டி. ராஜேந்தரின் இளைய மகன் குறலரசன் மற்றும் கமல் என மூவருமே டிசர்ட் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

விக்ரம் விழாவில்

விக்ரம் விழாவில்

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட புதிய பிக் பாஸ் சிம்பு, தனது திரை குரு கமல் தான் எனக் கூறியிருந்தார். தொடர்ந்து சிம்பு மற்றும் அவரது குடும்பத்துடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் தற்போது டி. ராஜேந்தர் சிகிச்சைக்காக செல்வதை அறிந்து உடனடியாக ஓடோடி அவரை சந்திக்க சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

செம ஃபிட்டா இருக்காரு

செம ஃபிட்டா இருக்காரு

டி. ராஜேந்தர் குறித்து தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு இந்த புகைப்படம் நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது உறுதி. செம ஃபிட்டாவே இருக்கிறார் டி. ராஜேந்தர். விரைவில் உயர் சிகிச்சை முடித்துக் கொண்டு நாடு திரும்புவார் என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X