twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கனவு படத்தை மீண்டும் தூசி தட்டும் கமல்.. பிரம்மாண்ட படைப்பான மருதநாயகம் உருவாகுமா?

    |

    சென்னை: இங்கிலாந்து எலிசபெத் ராணியை அழைத்து வந்து பட பூஜை நடத்திய உலகநாயகனின் கனவு படமான மருதநாயகம் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் உயிர் பெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Recommended Video

    Unreleased Big Budget Tamil Movies | Dhuruva Natchathiram, Marudhanayagam

    1991ம் ஆண்டு இந்த படத்தின் கதையை மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து கமல்ஹாசன் எழுதி முடித்தார்.

    1997ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக பட பூஜை போடப்பட்டது.

    லதா மங்கேஷ்கர் மறைவு இசைத்துறையில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது... இசைப்புயல் உருக்கம் லதா மங்கேஷ்கர் மறைவு இசைத்துறையில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது... இசைப்புயல் உருக்கம்

    முகமது யூசுப் கான் வரலாறு

    முகமது யூசுப் கான் வரலாறு

    குணா படத்தை முடித்த கையோடு வரலாற்று படத்தை எடுக்க முடிவு செய்த கமல்ஹாசன் 1937ம் ஆண்டு வெளியான அம்பிகாபதி படத்தை உருவாக்க முடிவு செய்தபோது எழுத்தாளர் சுஜாதாவின் ஆலோசனைப்படி 18ம் நூற்றாண்டு போர் வீரன் முகமது யூசுப் கான் வரலாற்றை மருதநாயகம் எனும் பெயரில் படமாக உருவாக்க முடிவு செய்து அதன் கதையை எழுத தொடங்கினார்.

    எலிசபெத் ராணி பங்கேற்பு

    எலிசபெத் ராணி பங்கேற்பு

    1997ம் ஆண்டு இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகப் போகும் படம் இது என அறிவித்த கமல்ஹாசன் மருதநாயகம் படத்தின் படத்துவக்க விழாவை பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடத்தினார். இங்கிலாந்து ராணியான 2ம் எலிசபெத் இந்த விழாவில் கலந்து கொண்டது ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்கள் கவனத்தையும் கவர்ந்தது. அன்றைய முதல்வர் கருணாநிதியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    85 கோடி ரூபாய் செலவில்

    85 கோடி ரூபாய் செலவில்

    இந்தியாவின் நடிப்பு ஜாம்பவான்களான விஷ்ணுவர்தன், நசிருதின் ஷா, அம்ரிஷ் புரி, ஓம் புரி, நாசர், பசுபதி நடிப்பில் இந்த படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. மேலும், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைக்கப்பட்டு இருந்தார்கள். அன்றைய தேதியில் 85 கோடி ரூபாய் செலவில் இந்த படம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    தடங்கல்

    தடங்கல்

    1998ம் ஆண்டு கிட்டத்தட்ட கமல்ஹாசன் மட்டும் 8 கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தின் ஷூட்டிங்கை பிரம்மாண்டமாக நடத்தி வந்த நிலையில், இணை தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கியதை அடுத்து அந்த படம் அப்படியே நின்று போனது. அதன் பின்னர் 2012ம் ஆண்டு, 2014ம் ஆண்டு என அவ்வப்போது கனவு படத்தை தொடர முற்பட்ட கமல் பல தடங்கல்கள் காரணமாக அதை கிடப்பில் போட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

    இனிமே வராது

    இனிமே வராது

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அளித்த பேட்டியில் மருதநாயகம் படத்தில் 40 வயது நடிகர் நடிக்க வேண்டும். இனிமேல், என்னால் அந்த படத்தை தொடர முடியாது. புதிய நடிகர்களை வைத்து எடுக்க முடிந்தால் எடுப்பேன் என்றார். இந்நிலையில், மீண்டும் மருதநாயகம் படம் ஆரம்பிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    சோனி நிறுவனம்

    சோனி நிறுவனம்

    கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க முன் வந்த நிலையில், மருதநாயகம் படத்தையும் அந்த நிறுவனத்தின் உதவியோடு உருவாக்கும் முயற்சியில் உலகநாயகன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கனவு நிறைவேறுமா

    கனவு நிறைவேறுமா

    கமல்ஹாசனின் 30 ஆண்டுகால கனவு படமான மருதநாயகம் சோனி நிறுவனம் க்ரீன் சிக்னல் கொடுத்தால் உடனடியாக ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை மிஸ் ஆகாமல் அந்த வரலாற்று சிறப்புமிக்க படம் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது விருப்பமாக உள்ளது.

    English summary
    Kamal Haasan plans to start again his dream movie Marudhanayagam with collaboration of Sony Films International.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X