குறும்படத்துடன் வந்த கமல்.. டிராமா குயின் ஷெரினாவுக்கும்.. அசீம் அண்ட் கோவுக்கும் ஆப்பு இருக்கா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக 3வது வாரத்தை நெருங்கி உள்ளது. இந்த வாரம் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் வயதான சேனாபதி கெட்டப்புக்காக மீசையை முழுவதும் ஷேவ் செய்து விட்டு செம சூப்பராக வந்துள்ளார். கூடவே குறும்படம் ஒன்றையும் கொண்டு வந்திருப்பது தான் கூடுதல் சிறப்பு.
தனலட்சுமி தள்ளி விட்டுத்தான் ஷெரினா கீழே விழுந்தார் என்றும் அவருக்கு தலையில் பலத்த அடி பட்டது என்றும் இந்த வாரம் மிகப்பெரிய டிராமா ஒன்று நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் நடைபெற்றது.
ஷெரினாவுக்கு சப்போர்ட்டாக அசீம், மகேஸ்வரி, அசல் கோலார் மற்றும் ஏடிகே தனலட்சுமி தான் தப்பு செய்தார் என சொல்லி வரும் நிலையில், ஒட்டுமொத்த பேருக்கும் இன்றைக்கு போடப்படும் குறும்படம் சரியான சவுக்கடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெளியே போக ரெடி
ஷெரினாவை தான் தள்ளி விடவில்லை என்றும் அப்படி தான் தள்ளி விட்டதாக நிரூபிக்கப்பட்டால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு, இந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேற தயார் என தனலட்சுமி கமல் முன்பாகவும் தைரியமாக பேசிய புரமோ காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த துணிச்சலுக்காகவே தனலட்சுமியை பாராட்டலாம், ஆனால், பேய் என்றால் தான் கொஞ்சம் பயம் போல என கலாய்த்து வருகின்றனர்.

அவங்க தான் தள்ளினாங்க
நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் யார் அப்படி ஷெரினாவை தள்ளி விட்டது என கமல் கேட்டதும், அசீம் எழுந்து நின்று தனலட்சுமி தான் தள்ளினாங்க என மீண்டும் தனது அதே வாதத்தை முன் வைத்தார். அசல் கோலார் அவங்க தள்ளி விட்டு இருக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு என்றார். ஆனால், தான் தள்ளியே விடவில்லை என தனலட்சுமி செம ஸ்ட்ராங்காக கமலிடம் உறுதியாக பேசி உள்ளார்.

தனலட்சுமிக்கு எதிராக
தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டாங்க என சொல்வது யாரெல்லாம் என கமல் கேட்டதும் அசீம், அசல் கோலார், ஏடிகே மற்றும் மகேஸ்வரி உள்ளிட்டோர் எழுந்து நின்றனர். உண்மை தெரிந்து விட்டால் என்ன ஆகுமோ என பயத்தில் ஷெரினா இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் நோட் பண்ணி கமெண்ட் செய்து வருகின்றனர்.

குறும்படம் போடும் கமல்
தனலட்சுமி ஷெரினாவை தள்ளி விட்டு இருந்தால் நிகழ்ச்சியை விட்டே வெளியேற தயார் என சொல்லிய நிலையில், குறும்படம் போடலாமா என கமல் கேட்க, ஆமாம் சார் போடுங்க என தனலட்சுமி சொல்ல, அந்த சைடில் அத்தனை பேருக்கு அல்லு இல்லை. இன்னைக்கு கமல் போடப் போகும் குறும்படத்திற்கு பிறகு பிக் பாஸ் வீடு எப்படி மாறப் போகிறது என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

தனலட்சுமி சிக்குவாரா
கமல்ஹாசன் வெளியிட உள்ள குறும்படத்தில் ஒருவேளை தனலட்சுமி தான் காரணம் என கமல் சொன்னால், தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா? என்கிற கேள்வியையும் அசீம் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். ஆனால், ஏற்கனவே சோஷியல் மீடியாவில் அந்த குறும்படத்தை நெட்டிசன்கள் போட்டுக் காட்டிய நிலையில், ஷெரினாவுக்கும் அசீம் அண்ட் கோவுக்கும் தான் ஆப்பு என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இன்னைக்கு நைட் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..


Click it and Unblock the Notifications