»   »  'விரு விருமாண்டி விருமாண்டி'... கெத்து மீசையுடன் இந்தியன் 2-க்கு தயாராகும் கமல்!

'விரு விருமாண்டி விருமாண்டி'... கெத்து மீசையுடன் இந்தியன் 2-க்கு தயாராகும் கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பெரிய மீசையுடன் கமல் புது லுக்- வீடியோ

ஒரு பக்கம் அரசியல் பரபரப்பு பணிகள், அன்றாட பிரச்சினைகளுக்கு சளைக்காமல் கருத்துப் போர் செய்தல் என பொதுவெளியில் கமல் ஹாஸன் பிஸியாக இருந்தாலும், தனது தாய் வீடான சினிமாவிலும் தன் பிடியை விட்டுவிடவில்லை.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக தயாராக ஆரம்பித்துவிட்டார் கமல். ஷங்கர் இயக்கும் இந்த மெகா படத்தின் வேலைகள் விரைவில் ஹைதராபாதில் தொடங்குகிறது. தொடர்ந்து தாய்லாந்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

Kamal Haasans new getup for Indian 2

முதல் பாகத்தில் லஞ்சத்தை கருவாக வைத்து இருந்தனர். இரண்டாம் பாகம் ஊழல் எதிர்ப்புதான் பிரதானம் என்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான் என்றாலும், திரைக்கதையை முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளாராம் ஷங்கர்.

கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா கதாபாத்திரம்தான் ஹீரோ. மகன் கமல் ஹாஸன் கிட்டத்தட்ட வில்லன்.

இரண்டாம் பாகத்திலும் தாத்தா பாத்திரம் இருக்குமா தெரியவில்லை.

இந்த நிலையில் பெரிய முறுக்கு மீசையில் இருக்கும் கமல்ஹாசனின் புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியன்-2 படத்துக்காக இந்த தோற்றத்தில் அவர் மாறி இருப்பதாக கூறப்படுகிறது. விருமாண்டி மீசையுடன் உள்ள இந்த புதிய கெட்டப்பை கமல் ரசிகர்கள் வரவேற்று பகிர்ந்து வருகின்றனர்.

English summary
The pictures of Kamal Haasan's new getup for Indian 2 going viral online

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X