அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் வெற்றிப்பயணம் தொடரட்டும்.. ரஜினிகாந்த் பிறந்தநாள்.. கமல் வாழ்த்து!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று திருவிழாவாக ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல பிரபலங்கள் மத்தியிலும் கொண்டாடப்படுகிறது.

பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ் கெய்க்வாட் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக மாறி ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களையே வியக்கும் அளவுக்கு ஸ்டைல் சாம்ராட் ஆக மாறினார் என்பது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயத்தையும் தாண்டி ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடமாகவே ரஜினிகாந்த்தின் வளர்ச்சி பார்க்கப்படுகிறது.

திரையுலக பிரபலங்கள், விளையாட்டுத் துறை, அரசியல், தொழிலதிபர்கள் என பல ப்ளூ டிக்குகளும் வரிசை கட்டி ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ரஜினியின் நண்பர் கமல் மற்றும் தனுஷ் உள்ளிட்டோர் என்ன சொல்லி வாழ்த்தி இருக்காங்கன்னு இங்கே பார்க்கலாம் வாங்க..

திரை ஆளுமை

திரை ஆளுமை

வாரிசு நடிகராக எல்லாம் சினிமாவுக்கு வந்து சாதிக்கவில்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வில்லன், செகண்ட் ஹீரோ, ஹீரோ, ஸ்டார், சூப்பர் ஸ்டார் என ஒவ்வொரு படியாக தனது விடா முயற்சி கொண்டு விஸ்வரூபம் கண்ட திரை ஆளுமை நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

டிரெண்டிங்கில் ரஜினிகாந்த்

டிரெண்டிங்கில் ரஜினிகாந்த்

டிரெண்டிங்கில் ரஜினிகாந்த் என்பது சொல்வதை விட ரஜினிகாந்தால் ட்விட்டர் இன்று டிரெண்டாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். #ரஜினிகாந்த் மற்றும் #Jailer உள்ளிட்ட ஹாஷ்டேக்குகள் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் ஆட்டிப் படைத்து வருகின்றன. ஏகப்பட்ட பிரபலங்களே சூப்பர் ஸ்டார் என ரசிகர்களாக மாறி வாழ்த்தி வருகின்றனர்.

அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார்

அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார்

"அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்." என நடிகர் ரஜினிகாந்துக்கு உலக நாயகன் கமல்ஹாசனே சூப்பராக ஒரு வாழ்த்து ட்வீட் போட்டு நெகிழ வைத்துள்ளார்.

நட்பும் போட்டியும்

நட்பும் போட்டியும்

கமல்ஹாசனின் படங்களில் வில்லனாக நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் பின்னர் கமல்ஹாசனுக்கு போட்டி நடிகராக மாறி 40 அண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் கமல் மற்றும் ரஜினியின் நட்பும் போட்டியும் அப்படியே தொடர்கிறது. விக்ரம் படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடிக்குமா என்றும் ஜெயிலருக்கு டஃப் கொடுக்க இந்தியன் 2 இறக்குகிறேன் என இருவரும் இந்த வயதிலும் அடுத்த தலைமுறை நடிகருக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே கெத்துக் காட்டி வருகின்றனர்.

தனுஷ் வாழ்த்து

தனுஷ் வாழ்த்து

இந்த ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்து பிரிந்தாலும், என்றும் தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவிட்டு வருகிறார் நடிகர் தனுஷ். காலையிலேயே ஹேப்பி பர்த்டே தலைவா என தனுஷ் பதிவிட்ட வாழ்த்து ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜெயிலர் டீம் வாழ்த்து

ஜெயிலர் டீம் வாழ்த்து

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜெயிலர் படக் குழுவினரே ரஜினிகாந்துக்கு ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். இன்று மாலை ஜெயிலர் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்டுக்கும் காத்திருக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X