twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி ஒழிகன்னு சொல்றது என் வேலை இல்லை.. விக்ரம் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் பரபரப்பு பேச்சு!

    |

    சென்னை: விக்ரம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அனிருத் உடன் இணைந்து அன்பே சிவம் படத்தில் இடம்பெற்ற "யார் யார் சிவம்" பாடலை பாடிய கமல் பின்னர் பேச ஆரம்பித்தார்.

    கடந்த 4 வருஷத்துக்கு பிறகு என் படத்தோட விழா இன்று நடைபெறுகிறது என பேசிய கமல், "இந்தி ஒழிகன்னு சொல்றது என் வேலை இல்லை" என பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    மேலும், தமிழ் மொழி பற்று குறித்தும் நடிகர் கமல் விக்ரம் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் விரிவாக தனது கருத்தை எடுத்துரைத்தார்.

    சூர்யா இருக்காரு.. கன்ஃபார்ம் பண்ண லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் டிரைலரிலேயே கண்டுபிடித்த ரசிகர்கள்!சூர்யா இருக்காரு.. கன்ஃபார்ம் பண்ண லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் டிரைலரிலேயே கண்டுபிடித்த ரசிகர்கள்!

    4 வருஷம் கழித்து

    4 வருஷம் கழித்து

    அனிருத் உடன் மேடையேறி பாடிய கமல் பின்னர் பேச ஆரம்பித்த போது, என்னோட பட விழாவை நடத்தி 4 வருஷம் ஆகுது என்றார். விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு விக்ரம் படத்தின் விழா தான் நடைபெறுகிறது. இடையே இந்தியன் 2 வெளியாகி விடும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படம் இன்னமும் ஷூட்டிங் முடியாமல் பாதியிலே நிற்பது குறிப்பிடத்தக்கது.

    டி ராஜேந்தர் அழுதுட்டாரு

    டி ராஜேந்தர் அழுதுட்டாரு

    தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவும் அரசியலும் ஒன்றுதான். நான் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும், டி. ராஜேந்தர் என் கையை பிடிச்சிகிட்டு அழுதுட்டாரு என மேடையில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் பற்றியும் கமல் பேசினார். மேலும், நானும் சிவாஜி, என்டிஆர் வீட்டு வாசலில் போய் நின்னுருக்கேன் வாய்ப்புக்காக என லோகேஷ் கனகராஜின் பேச்சுக்கும் பதில் அளித்து விட்டார்.

    இந்தி ஒழிகன்னு சொல்ல மாட்டேன்

    இந்தி ஒழிகன்னு சொல்ல மாட்டேன்

    இந்தி ஒழிகன்னு சொல்றது என் வேலை கிடையாது, விருப்பமும் இல்லை. ஆனால், தமிழ் வாழ்கன்னு சொல்றது என் கடமை. இந்தி கத்துக்கோ, சைனீஸ் கத்துக்கோ, குஜராத்தி கூட கத்துக்கோ.. ஆனால், தமிழை விட்றாதா என கமல் பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமும் ஆரவாரம் செய்தது அதிர்ந்தது.

    திருப்பதியில கூட்டம் குறையாது

    திருப்பதியில கூட்டம் குறையாது

    நீங்க காலண்டர்ல வெங்கடாசலபதி படம் போடுறதுனால, அங்க திருப்பதியில கூட்டம் குறைஞ்சிடுமா என்ன? என மொழிப் பற்றின் ஆழம் குறித்தும் கமல் விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியது ஒட்டுமொத்த தமிழர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

    இயக்குநருக்கு பாராட்டு

    இயக்குநருக்கு பாராட்டு

    லோகேஷ் கனகராஜிடம் 16 உதவி இயக்குநர்கள் உள்ளனர். அவர் ஒரு பெரிய பட்டறையே வைத்திருக்கிறார். இன்னைக்கு தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களிடம் அது இல்லை என்பது தான் பிரச்சனையே என இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பணியையும் மேடையில் பாராட்டினார் கமல்.

    English summary
    Kamal Haasan talks about Hindi issue at Vikram trailer and audio launch. He says I never opposed Hindi language, peoples will learn many languages but never forgot their mother language.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X