For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கணக்கு வச்சி கோபப்படுறீங்களா.. அனிதா சம்பத்தை செமையா கலாய்த்த கமல்.. எல்லாரும் சிரிச்சிட்டாங்க!

  |

  சென்னை: பிக் பாஸ் டிரெண்டிங் விருது வென்ற அனிதா சம்பத்தை கமல் கலாய்த்த விதத்தை பார்த்த ஹவுஸ்மேட்ஸ், ரசிகர்கள் என எல்லாரும் விழுந்து சிரிச்சிட்டாங்க.

  சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், இந்த முறை பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

  சுரேஷ் சக்கரவர்த்தி உடன் சண்டை போட்ட அவரையே பிக் பாஸ் ஜோடி போட்டு ஆடவும் வைத்து அசத்திட்டார்.

  பிக் பாஸா.. ஓட்ட காசா.. இப்படி எல்லாமே லீக் ஆகுதே.. வைரலாகும் ரேகா எவிக்‌ஷன் மீம்ஸ்!

  காலா டு காப்பான்

  காலா டு காப்பான்

  சன் டிவியின் செய்திவாசிப்பாளரான அனிதா சம்பத், சோஷியல் மீடியாவில் அவரது அழகான தோற்றத்துக்காகவே செம வைரலானார். மேலும், காலா, சர்கார், தர்பார், காப்பான், டேனி உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு வேடங்களிலும், செய்தி வாசிப்பாளராகவும் அனிதா சம்பத் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள், சீரியல்கள் கிடைக்கும் என தெரிகிறது.

  சுரேஷ் சக்கரவர்த்தியுடன் சண்டை

  சுரேஷ் சக்கரவர்த்தியுடன் சண்டை

  செய்திவாசிப்பாளர்கள் எல்லாம் பேசினாலே எச்சில் தெறிக்கும் என சுரேஷ் சக்கரவர்த்தி சொன்னதாக அவரை வேண்டுமென்றே வம்பிழுத்து சண்டையை ஆரம்பித்து வைத்தார் அனிதா சம்பத். இருவருக்கும் இடையே காரசாரமாக சண்டை நடைபெற்று வந்த நிலையில், இருவரையும் எப்படி ஒன்று சேர்ப்பது என பிக் பாஸ் சூப்பர் பிளான் போட்டு இருவரையும் சமாதானம் படுத்தி விட்டார்.

  செம டான்ஸ்

  செம டான்ஸ்

  வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தி உடன் இணைந்து சின்ன மச்சான் செல்ல மச்சான்னு அவரை கொஞ்சி கொஞ்சி அனிதா சம்பத் ஆடியதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், ப்பா இன்னாம்மா அனிதா சம்பத் இப்படி ஆடுறாரே.. மொட்டை பாஸ் எல்லாத்துலயும் புகுந்து விளையாடுறாரே என பாராட்டித் தள்ளினர்.

  இந்தியளவில் டிரெண்டிங்

  இந்தியளவில் டிரெண்டிங்

  ஜீ தமிழ் விஜே அர்ச்சனா அக்கா உள்ளே வந்ததும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பட்டத்தை கொடுத்தார். இறுதியாக பிக் பாஸ் டிரெண்டிங் பட்டத்தை சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத்துக்கு கொடுத்தார். அதை பார்த்து சந்தோஷப்படாமல், பாசிட்டிவ்வா டிரெண்ட் ஆகுறேனா, நெகட்டிவா ஆகுறேனா என அர்ச்சனாவிடமே கேட்டார்.

  ரசிகர்கள் அப்செட்

  ரசிகர்கள் அப்செட்

  அதே போல நடன போட்டியில் யாரு சூப்பரா ஆடுனாங்க என்கிற வாக்கெடுப்பு நடந்தது. அப்போ எல்லாரும் கேபிக்கு அதிகமா ஓட்டுப் போட்டாங்க, ஜோடி நம்பர் ஒன்லையே கலக்குனவங்க அவங்க ஆடுறதெல்லாம் பெரிய விஷயமா? அனிதா சம்பத் அந்த அளவுக்கு சூப்பரா ஆடுனாங்க அவங்களுக்கு கொடுக்கலையே என அனிதாவின் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள்.

  வேல்முருகன் ஆடுனதெல்லாம் டான்ஸா

  வேல்முருகன் ஆடுனதெல்லாம் டான்ஸா

  அதே போல அனிதா சம்பத்துக்கு ஜோடியாக இந்த வயதிலும் அந்த ஆட்டம் போட்ட மொட்ட பாஸ் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஓட்டுப் போடாமல் வேல்முருகனுக்கு ஓட்டுப் போட்டு மீண்டும் போட்டியாளர்கள் குரூபிஸத்த காட்டுறாங்க என்ற ட்ரோலும், வேல்முருகன் ஆடுனதெல்லாம் ஒரு டான்ஸா என்றும் கலாய்த்து வருகின்றனர்.

  3 தடவை தான் சார்

  3 தடவை தான் சார்

  எதுக்காக வேண்டுமானாலும் நீங்க டிரெண்ட் ஆகலாம் என கமலும் கொஞ்சம் ஏத்தி விட்டதும், அனிதா சம்பத் உடனே பொங்கி விட்டார். சார், நான் ஒரு நாளைக்கு 30 தடவை கோபப்படணும்னா அதுக்கு பதிலா 3 தடவை தான் சார் கோபப்படுறேன் என அப்பாவியாய் அனிதா பேசினார்.

  Bigg Boss Tamil Season 4 • First Eviction | Kamal Hassan
  கணக்கு வச்சி கோபப்படுறீங்களா

  கணக்கு வச்சி கோபப்படுறீங்களா

  உடனே, கிடைச்சதுடா சான்ஸ் என என்னது கணக்கு வச்சி கோபப்படுறீங்களா என பங்கம் பண்ணி கலாய்த்ததும், பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் மற்றும், ஜூம் காலில் இருந்த ரசிகர்கள் என ஒட்டுமொத்த பேரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டாங்க. அதிலேயும், ஒரு நாள் விட்டு ஒரு நாளெல்லாம் கோபப்படுகிறேன் என அனிதா சொன்னது காமெடியின் உச்சம்.

  English summary
  Kamal Haasan trolled Anitha Sampath for her anger counting talks in the Saturday night show. All other housemates and Bigg Boss Tamil 4 fans laughed loudly.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X