தளபதி 67ல் இப்படியொரு கேமியோ ரோலா… விஜய்யுடன் முதன்முறையாக இணையும் அந்த பிரபலம்…?

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படத்தை விடவும் அடுத்து உருவாகவுள்ள தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 67 படத்தில் ஏற்கனவே ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்துள்ள நிலையில், தற்போது இன்னொரு தரமான அப்டேட் கிடைத்துள்ளது.

விஜய் – லோகேஷ் காம்போ

விஜய் – லோகேஷ் காம்போ

மாஸ்டர் திரைப்படம் மூலம் முதன்முறையாக கூட்டணி வைத்த விஜய் - லோகேஷ் கூட்டணி, மீண்டும் தளபதி 67ல் இணைகிறது. வாரிசு படத்தை முடித்துவிட்டு உடனடியாக தளபதி 67 திரைப்படத்தில் இணைகிறார் விஜய். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள 'தளபதி 67' குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. டிசம்பரில் தளபதி 67 அப்டேட் கண்டிப்பாக வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய்யுடன் யார் யார் நடிக்கின்றனர் என சில தகவல்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

மல்டி ஸ்டார்ஸ் ப்ராஜக்ட்

மல்டி ஸ்டார்ஸ் ப்ராஜக்ட்

லோகேஷ் கனகராஜ்ஜின் படங்கள் எப்போதுமே மல்டி ஸ்டார்ஸ் ஜானரில் தான் உருவாகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கியிருந்த விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்திருந்தனர். இறுதிக் காட்சியில் சூர்யா ஒரு மாஸ் கேமியோ ரோலில் நடித்து மிரட்டியிருந்தார். இப்போது அதேபோல தளபதி 67 படத்திலும் ஒரு பவர்ஃபுல் கேமியோ ரோலை பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்துள்ளாராம்.

விஜய்யுடன் முதன்முறையாக

விஜய்யுடன் முதன்முறையாக

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால், சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். இந்நிலையில், தளபதி 67 படத்தில் கமல்ஹாசனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம். கமல் ஓக்கே சொல்லிவிட்டால், தளபதி 67 லோகேஷின் யுனிவர்ஷல் படமாக இருக்கும் என்றும், இல்லையென்றால் தனி படமாக உருவாகும் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக விஜய் - கமல் முதன்முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

தோனியும் இணைகிறாரா?

தோனியும் இணைகிறாரா?

இதனிடையே, தளபதி 67 படத்தில் தோனியும் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு வில்லனாக இல்லாமல், முக்கியமான ஒரு கேரக்டரில் அவரை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அதேநேரம், தளபதி 67 பூஜையே இன்னும் போடப்படாத நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 150 கோடிக்கும் அதிகமான விலை கொடுத்து, தளபதி 67 ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாம். இதுகுறித்தும் உண்மையான அப்டேட் என்னவென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X