செம.. விக்ரம் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள்? அதிலும், ஒரு பாடலை கமலே எழுதியிருக்கிறாராம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் இல்லை என்பதை கைதி படத்தில் ஒரு பாடல் கூட வைக்காமல் உணர்த்தியிருப்பார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் பாடல்கள் இருந்தாலும், கதையோடு ஒன்றியே இருக்கும். இந்நிலையில், கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன என்கிற செம ஹாட்டான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அதிலும், ஒரு பாடலை கமல் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

குறையும் பாடல்கள்

குறையும் பாடல்கள்

ஹாலிவுட் பாடங்களிலும் பாடல்களுக்கான தனி படங்கள் இருக்கின்றன. ஆக்‌ஷன் படங்களில் பாடல்களை வெகுவாக அவர்கள் தவிர்த்து விடுகின்றனர். ஒரு படத்துக்கு 10 பாடல்களுக்கும் மேல் இருந்த தமிழ் சினிமாவில் அந்த பழக்கம் 6 பாடல்களாகவும், 5 பாடல்களாகவும் குறைந்து வந்த நிலையில், தற்போது எல்லாம் ஒரு பாடலே படம் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்றும் பாடல்களே வேண்டாம் என்றும் இளம் இயக்குநர்கள் புதிய முயற்சிகளை செய்து வருகின்றனர்.

ஒரு பாடல் கூட இல்லை

ஒரு பாடல் கூட இல்லை

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த கைதி படத்தில் ஒரு பாடல் கூட இல்லாமல் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. டேப் ரிக்கார்டரில் சில பழைய பாடல்களை மட்டுமே ப்ளே செய்து வேற லெவலில் ஸ்க்ரீன் பிளே அமைத்திருப்பார். நடிகர் கார்த்தியும் லோகேஷ் கனகராஜின் ஐடியாவுக்கு ஓகே சொல்லி விட்டு பாடல்கள் மற்றும் ஹீரோயின் இல்லாமல் டில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

விஜய் படத்தில் பாடல்கள்

விஜய் படத்தில் பாடல்கள்

கைதி படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கிய நிலையில், வாத்தி கம்மிங் ஒத்து, குட்டி ஸ்டோரி, டூயட் பாடல் என அத்தனை விதமான பாடல்களையும் வைத்திருந்தார். ஆனால், பாடல்கள் கதையை தாண்டி தனியாக ஒரு செட்டில் கலர் கலர் டிரெஸ் அணிந்து ஆடுவது போல இல்லாமல் கதையோடு டிராவல் செய்யும் பாடல்களாகவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருந்தார்.

விக்ரம் படத்தில்

விக்ரம் படத்தில்

இந்நிலையில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் 3 பாடல்களை வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் வரிகளில்

கமல் வரிகளில்

மேலும், "பத்தல.. பத்தல" என ஆரம்பமாகும் ஒரு பாடலை கமல்ஹாசனே எழுதியுள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. வரும் மார்ச் 14ம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், சீக்கிரமே ஒரு பாடல் லிரிக் வீடியோவையும் அனிருத் வெளியிட தயாராகி விட்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

3 பேருக்கும் தீம் மியூசிக்

3 பேருக்கும் தீம் மியூசிக்

விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என மூன்று தேசிய விருது வென்ற நடிகர்கள் நடித்து வரும் நிலையில், அவர்கள் மூவருக்கும் தனித்தனியே பிரத்யேகமான தீம் மியூசிக்கை அனிருத் போட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விக்ரம் திரைப்படம் வேற லெவலில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விஜயுடன்

மீண்டும் விஜயுடன்

விக்ரம் படத்தை முடித்த பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜயுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகவுள்ளார் என்றும் விஜய்க்கு கதை சொல்லி ஓகேவும் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. தளபதி 66 படத்தை முடித்து விட்டு தளபதி 67 படத்தில் லோகேஷ் உடன் விஜய் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இயக்குநர் அட்லியும் நடிகர் விஜயுடன் மீண்டும் இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X