»   »  விசாரணை படம்... வெற்றிமாறனைப் பாராட்டிய கமல்ஹாசன்!

விசாரணை படம்... வெற்றிமாறனைப் பாராட்டிய கமல்ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணைை படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் விசாரணை.


Kamal Hassan praises Visaranai movie

சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்ற நாவலைத் தழுவி இந்த இந்தப் படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.


ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, மறைந்த எடிட்டிங் செய்துள்ளார்.


உலகம் முழுவதும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தை, பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தை நேற்றுப் பார்த்த கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.


Kamal Hassan praises Visaranai movie

விசாரணை படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

English summary
Kamal Hassan has watched Visaranai movie and praised Director Vetrimaran crew

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil