»   »  கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாஸன் மனைவி மரணம்!

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாஸன் மனைவி மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மனைவி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.

கமல் ஹாஸனுடைய இரண்டாவது அண்ணன் சந்திரஹாஸன். இவர் கமல் ஹாஸனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ளார். வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.

Kamal Hassan's brother Chandrahassan's wife passes away

இவருடைய மனைவிதான் கீதாமணி. சந்திரஹாஸன் - கீதாமணி தம்பதிகளின் மகள்தான் நடிகை அனுஹாஸன்.

உடல் நலக் குறைவு காரணமாக கீதாமணி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று கீதாமணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கீதாமணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

கீதாமணியின் உடல் ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த கீதாமணிக்கு நிர்மல்ஹாசன் என்ற மகனும், அனுஹாசன் என்ற மகளும் உள்ளனர்.

English summary
Kamal Hassan's brother Chandrahassan's wife Geethamani was passed away on Thursday

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil