»   »  எலும்பில்லாத உணவு சு சாவுக்குப் பிடிக்கலாம்... எனக்கு இல்லை! - கமல் ஹாஸன்

எலும்பில்லாத உணவு சு சாவுக்குப் பிடிக்கலாம்... எனக்கு இல்லை! - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் இன்றைய ட்விட்டர் அரசியல் போர் ஆரம்பமாகிவிட்டது. ஒரு பக்கம் அதிமுக, இன்னொரு பக்கம் சுப்பிரமணியசாமி என இரு முனைத் தாக்குதல்கள் அவரை நோக்கி. இரண்டு தரப்புக்குமே சளைக்காமல் பதில் கூறி வருகிறார் கமல்.

கமல் ஹாஸனின் ட்விட்டப் போர் பற்றி நேற்றுப் பேசிய தெரிவித்திருந்த அமைச்சர் செங்கோட்டையன், 'ஊரைவிட்டே ஓடிப் போகிறேன் என்று சொன்ன கமல் ஹாஸன் தமிழ் நாட்டு அரசியல் பற்றிப் பேசத் தகுதியற்றவர்' என்று கூறியிருந்தார்.

Kamal Hassan's reply to Sengottaiyan

இன்னொரு பக்கம், சுப்பிரமணிய சாமி கமலை கேவலமாகத் திட்டி பதிவிட்டார். முதுகெலும்பில்லாத சுயதம்பட்ட முட்டாள்' என்று அவர் கமலைத் திட்டினார்.

செங்கோட்டையன், சு சாமி இருவருக்குமே பொதுவாக ஒரு ட்விட்டில் கமல் பதில் கூறியுள்ளார்.

"அவருக்கு பதிலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க விரும்பவில்லை. சூடான அரசியல் வாதங்களில் என்னை விட அவர் பல மடங்கு அனுபவம் மிக்கவர். அவருக்கு எலும்பில்லாத சாப்பாடு பிடிக்கலாம். எனக்குப் பிடிக்காது," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
In a tweet, Kamal Hassan responded to Minister Sengottaiyan's recent attack on him

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil