twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு சவால் விடும் கமல்... பாபா ரிலீஸுக்குப் போட்டியாக விருமாண்டி.. இது லிஸ்ட்லயே இல்லையே?

    |

    சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம், கடந்த வாரம் ரீ-ரிலீஸானது.
    ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பொலிவுடன் வெளியான பாபா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
    இந்நிலையில், ரஜினியின் பாபா ரூட்டில் கமல்ஹாசனும் ரீ-ரிலீஸ் ரேஸில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சட்டுன்னு பார்த்த உடனே தனுஷ்னு நினைச்சீங்களா.. பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் ரஜினிகாந்த்! சட்டுன்னு பார்த்த உடனே தனுஷ்னு நினைச்சீங்களா.. பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் ரஜினிகாந்த்!

     ரீ-ரிலீஸான பாபா

    ரீ-ரிலீஸான பாபா

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 12ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவரது நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான பாபா ரீ-ரிலீஸானது. ரீ-எடிட், டால்பி சவுண்ட் மிக்ஸிங் என முற்றிலும் புதுப் பொலிவுடன் வெளியான பாபா படத்தை பார்க்க, அதிகாலை 4 மணி காட்சிக்கே ரசிகர்கள் திரண்டு வந்தனர். மாண்டஸ் புயலில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பாபா படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருந்தனர். மேலும், முதல் நாளில் 50 லட்சம் ரூபாய் வரை வசூலும் செய்தது பாபா.

     கமல் எடுத்த முடிவு

    கமல் எடுத்த முடிவு

    2002ல் வெளியான பாபா அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்தது. தற்போது அதன் கிளைமேக்ஸ் காட்சியும் மாற்றப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினி ரூட்டில் கமலும் தனது விருமாண்டி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம். 2004 பொங்கலை முன்னிட்டு ரிலீஸான விருமாண்டி, தமிழ்த் திரையுலகில் முக்கியமான மைல் கல் எனலாம். ஒரே சம்பவத்தை இருவேறு விதமான பார்வையில் திரைக்கதையாக்கியிருப்பார் கமல். மதுரை, ஜல்லிக்கட்டு என பக்கா கிராமத்து படமாக ரிலீஸாகி ஹிட் அடித்தது விருமாண்டி.

     சண்டியருக்கு வந்த சிக்கல்

    சண்டியருக்கு வந்த சிக்கல்

    முன்னதாக விருமாண்டி படத்துக்கு 'சண்டியர்' என டைட்டில் வைத்திருந்தார் கமல்ஹாசன். இதனால் இந்தப் படம் வெளியாவதில் மிகப் பெரிய சிக்கல் எழுந்தது. சண்டியர் என்ற டைட்டிலுடன் படம் வெளியாகக் கூடாது என அப்போதையை அதிமுக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால் இந்த டைட்டில் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்று வந்தது. இறுதியாக வேறு வழியே இல்லாமல் 'விருமாண்டி' என்ற டைட்டிலில் இந்தப் படம் வெளியானது. இந்நிலையில், விருமாண்டி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகலாம் என்ற தகவலால் கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

     மீண்டும் மிரட்டுவாரா விருமாண்டி

    மீண்டும் மிரட்டுவாரா விருமாண்டி

    கமலுடன் அபிராமி, நெப்போலியன், பசுபதி, நாசர், ரோஹினி, எஸ்.என். லக்‌ஷ்மி, ராஜேஷ், காதல் சுகுமார் உட்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். முக்கியமாக இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் விருமாண்டி படத்திற்கு பெரும் பலம் சேர்த்தது. இந்நிலையில், இந்தப் படத்தை புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியிட்டால் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வரும் பொங்கல் ஸ்பெஷலாக விருமாண்டி ரீ-ரிலீஸானால் இன்னும் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

     பாக்ஸ் ஆபிஸ் கன்ஃபார்ம்

    பாக்ஸ் ஆபிஸ் கன்ஃபார்ம்

    விக்ரம் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள கமலுக்கு, இப்போது அனைத்து தரப்பு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. இதனால், விருமாண்டி ரீ-ரிலீஸானால் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் எனக் கூறி வருகின்றனர். மேலும், 2004ல் வெளியான விருமாண்டி இன்று வரை தமிழ்த் திரையுலகில் திரைக்கதைக்கான பேசுபொருளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajinikanth's Baba was re-released last week. Thus, Kamal Haasan is planning to re-release his film Virumandi. An announcement in this regard is expected to be made soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X