»   »  புஷ்ஷை சந்திக்கிறார் கமல்?

புஷ்ஷை சந்திக்கிறார் கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருமாண்டி படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யச் செல்லும் கமல்ஹாசனை, அந் நாட்டு அதிபர் ஜார்ஜ்புஷ்சுடன் சந்திக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான முயற்சியை பிரபல பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம். சுவாமி மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன் தினம் அமெரிக்கா புறப்பட்ட கமல் வரும் 24, 25ம் தேதிகளில் அங்கு படத்தை ரிலீஸ் செய்கிறார்.நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்ஸி, மாசாசூட்ஸ், லாஸ் ஏன்ஜெல்ஸ் ஆகிய நகர்களில் படத்தின் பிரீமியர் ஷோதிரையிடப்படுகிறது.

படத்தைக் காண ஹாலிவுட் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கமலுடன் அமெரிக்கபத்திரிக்கையாளர்கள் பேட்டி காணவுள்ளனர்.

தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேசனலுக்கு, ஹாலிவுட்டில் ஒரு டிஸ்ட்ரிபியூசன்நிறுவனத்தையும் தொடங்கவும் கமல் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது அதற்கான அலுவலகத்தையும்கமல் திறக்கிறார். இனி தன் படங்களை இந்த நிறுவனம் மூலமே அமெரிக்காவில் கமல் வெளியிடுவார்.

இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கமல் சந்திப்பார் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil