»   »  மகளுடன் நடிக்கும் புதிய படம்... நடிகர் சங்க நிலத்தில் பூஜை போடும் கமல்

மகளுடன் நடிக்கும் புதிய படம்... நடிகர் சங்க நிலத்தில் பூஜை போடும் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க நிலத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் துவக்க விழா நடைபெறும் என கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

கமல்- ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 29 ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

Kamal Next Movie Pooja in Nadigar Sangam Grounds

மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவை நடிகர் சங்க நிலத்தில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் 'ராஜ்கமல் நிறுவனத்தின் 41 வது படத்தை எங்களுடைய குடும்ப இடமான நடிகர் சங்க நிலத்தில் துவங்குகிறோம்.

நடிகர் சங்கத்துக்கு நன்றி' என்று தெரிவித்திருக்கிறார். கமலின் இந்த அறிவிப்பு நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் நடிகர் சங்க நிலத்தில் துவங்குவதால் இப்பட பூஜையில், கோலிவுட்டின் ஒட்டுமொத்த நடிக, நடிகையரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

English summary
Kamal Haasan Says "41st production of RKFI will be unveiled at Nadigar sangam grounds".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil