»   »  'ஆமா.. சபாஷ் நாயுடுவை நான்தான் முழுசா இயக்கப் போறேன்!'- கமல் ஹாஸன்

'ஆமா.. சபாஷ் நாயுடுவை நான்தான் முழுசா இயக்கப் போறேன்!'- கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சபாஷ் நாயுடு படத்தை இயக்கும் பொறுப்பை கமல் கையிலெடுத்துக் கொண்டார் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று அதை உறுதிப் படுத்தி கமல் ஹாஸனே ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "என்னுடைய இயக்குநருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த நான்காவது நாளில் இந்த மோசமான நிலை ஏற்பட்டுவிட்டது. லைம் நோய் பாதித்திருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது மிக அரிதான நோய். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்தான் வருகிறது. எனவே இப்போது நானே படத்தை முழுதாக இயக்குகிறேன்.


Kamal officially announced his directorial

முதலில் ஒரு தற்காலிக இயக்குநராகத்தான் பாடல் காட்சியை இயக்கினேன். என் நண்பர் சீக்கிரம் குணமடைந்து வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில். இப்போதும் அந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் சற்று தாமதமாவதால், இங்கு வேறு சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதைத் தவிர்க்கவே படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்கிறேன்.


ராஜீவ் குமாருக்கு சிறப்பான சிகிச்சைக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பாடு செய்துள்ளோம். 24 மணி நேரமும் அவர் உடல் நிலையைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் நலமடைந்து வந்துவிடுவார்.


ராஜீவுக்கும் எனக்கும் நீண்ட கால நட்பு. இயக்குநராக 25 ஆண்டுகளுக்கு முன் என்னுடன்தான் பயணத்தைத் தொடங்கினார். இதுவரை 25 படங்களை இயக்கியுள்ளார். மேலும் 25 படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.


ஒரு இயக்குநராக கமல் ஹாஸனுக்கு இது 5 வது படம். இதற்கு முன் சாக்ஷி 420, ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் ஆகிய படங்களை கமல் ஹாஸன் இயக்கியுள்ளார்.

English summary
Kamal Hassan has officially announced that he is direction the whole movie Sabash Nayudu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil