என்ன தாம்ப்பா நினைக்கிறீங்க இவங்க...கடந்த வாரம் பிரியங்காவிற்கு திட்டு...இந்த வாரம் ஆதரவு
சென்னை : நாளுக்கு நாள் மக்களின் மனநிலையும், ஆதரவும் மாறி வருவதால் பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் பலவும் முந்தைய சீசன்களை நினைவுபடுத்துவதாக இருந்து வருகிறது.
ஆனால் டாஸ்குகளை விடவும், போட்டியாளர்களை ஆதரிப்பதிலும், விமர்சிப்பதிலும் மக்களின் மனநிலை மாறி வருவது போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரித்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு வார எவிக்ஷனின் போதும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கு ஏற்க, யாரும் எதிர்பார்க்காத பலரை குறைவான ஆதரவு அளித்து வெளியேற்றி வருகிறார்கள்.

ஆர்வத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 ன் 76 வது நாளான இன்று, இந்த வாரம் வெளியே போவது யார், காப்பாற்றப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்புடனும், கமல் என்ன பேச போகிறார் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரியங்கா பற்றி சொன்ன அக்ஷரா
முதல் ப்ரோமோவில் இந்த போட்டியாளர்கள், மக்கள் காப்பாற்றுவார்கள் என வைத்துள்ள நம்பிக்கை, அதை மக்கள் மாற்றுவது ஆகியவை பற்றி பேசுகிறார் கமல். இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்கா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அக்ஷராவிடம் கமல் கேட்கிறார். அவரும் நேருக்கு நேராக வெளிப்படையாக குற்றங்களை அடுக்குகிறார்.

மீண்டும் விளாசிய கமல்
மூன்றாவது ப்ரோமோவில், கண்ணாடி டாஸ்கிற்கு பிறகு உங்களிடம் ஒரு மாற்றத்தை பார்க்கிறேன் நான். இப்போது அக்ஷரா சொன்ன குற்றச்சாட்டை இதற்கு முன்பும் யாராவது சொல்லி இருக்கிறார்களா என யோசித்து பாருங்கள் னெ கேட்கிறார் கமல். பிரியங்கா யோசித்து முடிப்பதற்குள்ளாகவே, சொல்லி இருக்கிறார்கள் என அழுத்தமாக சொல்லி முடிக்கிறார்.

அப்படி நீங்க நினைக்கிறீங்க
என்னுடைய பிரஷரை வேறு ஒருவரிடம் நான் எடுத்துச் சென்றது கிடையாது என தயக்கத்துடன் பேசுகிறார் பிரியங்கா. அப்படி நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் அதில் கவனமாக இருந்திருக்க வேண்டும். இது புரியும் என நினைக்கிறேன் என்றார் கமல். பிரியங்காவும், மாத்திரிக்கிறேன் சார் என்கிறார்.

ஆதரவை குவிக்கும் ரசிகர்கள்
இதை பார்த்த நெட்டிசன்கள், ஏன் எப்பவும் கமல், பிரியங்காவை குறிவைத்தே பேசி வருகிறார். பிரியங்கா தவிர வேறு யாரையும் இவர் கண்ணுக்கு தெரியாதா. பாவம் பிரியங்கா. பிரியங்கா ஸ்டிராங்கான பிளேயர். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். Stay strong Priyanka என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

என்னதாம்ப்பா நினைக்கிறாங்க
கடந்த வாரம் அரசியல் மாநாடு டாஸ்க் நடைபெற்ற போது பிரியங்கா ஓவரா கத்துறார். அவரை பார்த்தாலே எரிச்சல் வருகிறது. அவரை முதலில் வெளியேற்றுங்கள். பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்றும், இதற்கு முன் கமல், பிரியங்காவை கேள்வி கேட்டு வறுத்தெடுக்கும் போதும் கைதட்டி சபாஷ் போட்டு ரசித்த ரசிகர்கள், இந்த வாரம் பிரியங்காவிற்கு ஆதரவை குவித்து வருகிறார்கள். இதனால் மக்களின் மனநிலை என்ன என கணிக்க முடியாமல் விமர்சகர்களே குழம்பி போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











