கமல் கொடுத்த மெகா ஆஃபர்... கண்டுகொள்ளாத விஜய்... வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ்?
சென்னை: விஜய்யின் தளபதி 67 டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் இந்தப் படத்தை லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
தளபதி 67ல் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகி வைரலாகின.
அதற்காக கமல் கொடுத்த மெகா ஆஃபரை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை என தற்போது சொல்லப்படுகிறது.

உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் மீண்டும் இணைவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தளபதி 67 டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரம் பட ஸ்டைலில் ப்ரோமோ
தளபதி 67 டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் டைட்டிலும் ப்ரோமோவுடன் வெளியாகி மாஸ் காட்டியது. தளபதி 67 டைட்டிலும் அதேபோல் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 67ல் கமல்ஹாசன்?
தளபதி 67 லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. டைட்டில் ப்ரோமோ வெளியாகும் போது கிட்டத்தட்ட இது உண்மையா இல்லையா என்பது தெரிந்துவிடும். முன்னதாக இந்தப் படம் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் தான் உருவாகிறது என்றும், இதில் கமல் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இது உண்மையாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது நெகட்டிவான ரிசல்ட் வந்துள்ளது.

கமல் ஆஃபரை கண்டுகொள்ளாத விஜய்
தளபதி 67 படத்தை முடித்துவிட்டு கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க விஜய்யிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாம். விஜய் அதற்கு ஓக்கே சொல்லிவிட்டால், கமல்ஹாசனும் தளபதி 67ல் கேமியோ ரோலில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் விஜய் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அவரது அடுத்த படத்தின் கால்ஷீட்டும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கு கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கமலும் தளபதி 67ல் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தளபதி 67 விக்ரம் படத்தின் சீக்வெல்லாக இல்லாமல் புதிய யுனிவர்ஸாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தளபதி 67ல் இருந்து கமல் விலகியதால் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் அப்செட் ஆனதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications











