twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    36 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு செய்திருக்கிறாரா கமல்... விக்ரம் சுவாரஸ்யங்கள்

    |

    சென்னை : கமல்ஹாசன் 1986 ம் ஆண்டு நடித்த விக்ரம் படம் ரிலீசாகி இன்றுடன் 36 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. முதலில் நாவலாக, பிறகு வார இதழில் தொடர் கதையாக வந்து, பிறகு சினிமாவாக உருவாக்கப்பட்ட இந்த படம் 1986 ம் ஆண்டு மே 29 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. டைரக்டர் ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன், லிசி, டிம்பிள் கபாடியா, அம்பிகா, அம்ஜத் கான், சாருஹாசன், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. கமல் நடித்த ராஜபார்வை படத்திற்கு பிறகு இரண்டாவதாக இந்நிறுவனம் தயாரித்த படம் விக்ரம். இந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    இந்த படம் ரிலீசான சமயத்தில் பல விமர்சனங்களை சந்தித்தது. படம் புரியவில்லை என்பது பெரும்பாலானவர்கள் முன் வைத்த விமர்சனம். ஆனால் 36 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் கமல் மற்றொரு படம் நடித்துள்ளார். அதுவும் இரண்டாம் பாகம் என சொல்லப்படுவதால் பலரும் தற்போது 1986 ம் ஆண்டு ரிலீசான விக்ரம் படம் என்ன கதை என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு விக்ரம் படம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தெரிந்தவர்கள் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

    மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.. பாராட்டித் தள்ளிய மோகன்லால்.. சூடுபிடித்த 'விக்ரம்’ புரமோஷன்!மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.. பாராட்டித் தள்ளிய மோகன்லால்.. சூடுபிடித்த 'விக்ரம்’ புரமோஷன்!

    விக்ரம் பட கதை

    விக்ரம் பட கதை

    இந்தியா தயாரித்த ராக்கெட் ஒன்றை ஒரு கும்பல் கடத்தி சென்று விடுகிறது. அதை சலாமியா என்ற நாட்டில் மறைத்து வைக்கின்றனர். ஆனால் அந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ இந்திய அரசு நாள் குறிக்கிறது. இந்தியாவின் நட்பு நாடான சலாமியாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அந்த ராக்கெட்டை மீட்கும் பொறுப்பு மனைவியை இழந்த, உளவுத்துறை அதிகாரியான விக்ரமிடம் ஒப்படைக்கப்படுகிறது. கம்யூட்டர் நிபுணரான ப்ரீத்தியின் உதவியுடன் சலாமியா நாட்டில் இருந்து விக்ரம், கடத்தப்பட்ட ராக்கெட்டை மீட்பது தான் படத்தின் கதை.

    அன்று விமர்சனம்...பிறகு கொண்டாட்டம்

    அன்று விமர்சனம்...பிறகு கொண்டாட்டம்

    படத்திற்கு வசனம் எழுதுவதற்காக சுஜாதாவிடம் கமல் இந்த கதையை சொன்ன போது, ராக்கெட் தொழில்நுட்பம் பற்றியோ, கம்ப்யூட்டர் பற்றியோ தெரியாத காலம் இது. இப்போது இந்த படத்தை எடுப்பதை விட 10 -15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்கினால் சூப்பர் ஹிட் ஆகும் என்று கூறி உள்ளார். அவர் சொன்னது போலவே அப்போது விமர்சிக்கப்பட்ட விக்ரம் படம், பல ஆண்டுகளுக்கு பிறகு ஆச்சரியப்பட வைத்தது. 36 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை பார்க்க ஏராளமானவர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதெல்லாம் முதல் முறை

    இதெல்லாம் முதல் முறை

    நகரும் கேமிராக்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் இந்திய படம் விக்ரம் தான். 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படமும் இது தான். கம்ப்யூட்டரில் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட முதல் படம் விக்ரம் தான். டைட்டில் சாங்கில் கமல் தனியாக நடனமாடி இருப்பார். சோலோவாக ஒருவர் பிரேக் டான்ஸ் ஆடியதும் இந்த படத்தில் தான்.

    கமல் இவ்வளவு செய்திருக்கிறாரா

    கமல் இவ்வளவு செய்திருக்கிறாரா

    முதலில் மணிரத்னம் இயக்குவதாக இருந்து, பிறகு மறுத்ததால் ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் சலாமியா நாட்டில் பேசப்படுவதாக ஒரு மொழி பேசுவார்கள். அதை உருவாக்கியது கமல் தான். பல தொழில்நுட்பங்களை விக்ரம் படத்திற்காக கமல் அறிமுகம் செய்தார். இதில் சாருஹாசன் நடித்த துப்பறிவாளர் கேரக்டர், ஜேம்ஸ் பாண்ட் படத்தை முன்னோடியாக வைத்து கமல் உருவாக்கி உள்ளார்.

    கமல் போட்ட பிளான்

    கமல் போட்ட பிளான்

    1986 ம் ஆண்டு விக்ரம் ரிலீசான அதே நாளில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய தான் கமல் முதலில் திட்டமிட்டார். ஆனால் பல காரணங்களால் பிறகு அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டதால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

    English summary
    Today Kamalhaasan starred 1986 Vikram movie completes 36 years of theatrical release. This was the first mega budget movie in tamil. This movie's budget was 12 crore. The movie was initially criticised. After many years of the movie release, it was celebrated not only by his fans and celebrated by all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X