twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனது கதையில் தானே நடித்த கமல்...20 ஆண்டுகளை கடந்த ஆளவந்தான்

    |

    சென்னை : நடிப்பில் சிவாஜிக்கு அடுத்தபடியாக புகழப்படுவது கமலஹாசன். தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்துள்ளார் கமல். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த சைக்கோ த்ரில்லர் படம் ஆளவந்தான்.

    வீணை வாசிக்கும் அழகான கீர்த்தி சுரேஷ்... மரக்கார் போஸ்டர் வெளியிட்டு மோகன்லால் பாராட்டு! வீணை வாசிக்கும் அழகான கீர்த்தி சுரேஷ்... மரக்கார் போஸ்டர் வெளியிட்டு மோகன்லால் பாராட்டு!

    நல்ல வசூலையும், பாராட்டுக்களையும் பெற்ற படம் இது. மனிசா கொய்ராலா, ரவீனா டன்டான், அனுஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த படம் பற்றிய 5 சுவாரஸ்ய விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    10 படங்களை முந்திய படம்

    10 படங்களை முந்திய படம்

    2001 ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஆளவந்தான் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழில் விஜய்யின் ஷாஜகான், விக்ரமின் காசி, விஜய்காந்த் நடித்த தவசி, மாதவன் நடித்த பார்த்தாலே பரவசம், டும்டும்டும் உள்ளிட்ட 10 படங்கள் ரிலீசாகின. கடும் போட்டிக்கு இடையில் பாக்ஸ்ஆபிசில் இடம்பிடித்தது கமலின் ஆளவந்தான். இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

    தாயம் நாவலின் கதை

    தாயம் நாவலின் கதை

    1984 ம் ஆண்டு கமல் எழுதிய தாயம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது தான் ஆளவந்தான் படத்தின் கதை. பிறகு இந்த கதையை திரைகதையாக எழுதியதும் கமல் தான். ஆனால் இந்த படத்தை இயக்கும் வேலையை சுரேஷ் கிருஷ்ணாவிடம் கொடுத்தார் கமல்.

    சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்

    சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்

    மோஷன் கன்ட்ரோல் கேமிரா பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் இந்திய படம் ஆளவந்தான் தான். இந்த படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. இதற்காக இந்த படம் தேசிய விருதினை வென்றது. ஆஸ்திரேலிய கட்டிங் கிராஃபிக்ஸ் முறைகளும் இந்த படத்தில் கையாளப்பட்டன.

    பிரம்மாண்ட ரிலீஸ்

    பிரம்மாண்ட ரிலீஸ்

    கமல் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் 600 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் மூலம் ஒரே நாளில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து, அதிக வசூலை பெறும் முறையை கமல் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இந்த படத்தின் இந்தி வெளியீட்டு உரிமம் மிகக் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது. இதனால் கமல் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டு, தயாரிப்பாளருக்கு உதவினார்.

    ஹாலிவுட்டிற்கு படத்திற்கு முன்னுதாரணம்

    ஹாலிவுட்டிற்கு படத்திற்கு முன்னுதாரணம்

    கமலின் ஆளவந்தான் படம், ஹாலிவுட் டைரக்டர் Quentin Tarantino, Kill Bill என்ற படத்தில் அனிமேடட் காட்சிகளை படமாக்க மிகப் பெரிய முன்னுதாரணமாக அமைந்தது. 2016 ல் அமெரிக்க திரைப்பட விழாவில் ஆளவந்தான் படம் திரையிடப்பட்டது. அமெரிக்கர்கள் பலரிடமும் பாராட்டை இந்த படம் பெற்றது.

    English summary
    Kamal's Aalavandhan completes 20 years of theatrical release today. this movie was released on 2001 diwali day. aalavandhan was released simultinously in tamil, hindi and telugu languages. this movie got Noational award for special effects.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X