For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆளவந்தான் ரீ-ரிலீஸ்: 400 கோடி செலவில்..? 1000 தியேட்டர்களில்! எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்

  |

  சென்னை: நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

  விக்ரம் வெற்றிக்குப் பின்னர் கமல் நடிப்பில் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  இதனிடையே 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படும் வழக்கம் காணப்படுகிறது.

  கடந்த மாதம் ரஜினியின் பாபா ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், கமலின் ஆளவந்தானும் மீண்டும் வெளியாவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.

  அப்படி டிரெஸ் அணிவதால் யாரும் எனக்கு வீடு வாடகைக்கு தரமாட்றாங்க.. பிக் பாஸ் நடிகை புலம்பல்! அப்படி டிரெஸ் அணிவதால் யாரும் எனக்கு வீடு வாடகைக்கு தரமாட்றாங்க.. பிக் பாஸ் நடிகை புலம்பல்!

  விஸ்வரூபமெடுத்த கமல்

  விஸ்வரூபமெடுத்த கமல்


  சினிமா, அரசியல் என பயணித்துக்கொண்டிருந்த கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தவறாமல் தலை காட்டிக் கொண்டிருந்தார். கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்ததோடு, கமலின் மார்க்கெட்டை மீண்டும் விஸ்வரூபமெடுக்க வைத்தது. இதனால் கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் ஷூட்டிங் சென்றது. அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள படத்திலும் கமிட் ஆகியுள்ளார் கமல். இந்நிலையில், தான் அவரது ஆளவந்தான் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  கமலின் ஆளவந்தான்

  கமலின் ஆளவந்தான்

  கமல் நடிப்பில் 2001ம் ஆண்டும் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணுவின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பில் வெளியானது ஆளவந்தான். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷங்கர் - எஷன் - லாய் கூட்டணி இசையமைத்திருந்தது. இன்றைய மதிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் ஆளவந்தான் உருவானதாக சொல்லப்படுகிறது.

  ஆளவந்தான் ரீ-ரிலீஸ்

  ஆளவந்தான் ரீ-ரிலீஸ்

  டெக்னிக்கலாக பல புதிய தொழில்நுட்பங்களுடன் உருவானது ஆளவந்தான். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், மோஷன் கண்ட்ரோல் கேமரா, ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் டெக்னாலஜி என மேக்கிங்கில் பலவிதமான மிரட்டலான சம்பவங்களை அரங்கேற்றினார் கமல். அதுமட்டும் இல்லாமல் நந்து என்ற கேரக்டரில் சிக்ஸ் பேக்கிலும், விஜய் என்ற ராணுவ வீரர் கேரக்டரிலும் வெரைட்டியாக நடித்து அசர வைத்தார். சிறந்த கிராபிக்ஸ், சிறந்த எடிட்டிங் உட்பட பல பிரிவுகளில் ஆளவந்தான் படத்துக்கு விருதுகள் கிடைத்தன. ஆனாலும் வசூல் ரீதியாக படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படம் விரைவில் ரீ-ரிலீஸாகவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.

  உள்ளங்களை ஆள வருகிறான்

  உள்ளங்களை ஆள வருகிறான்

  இதுகுறித்து ட்வீட் செய்துள்ள தாணு, விரைவில் திரையரங்குகளில் உங்களை ஆள வருகிறான் என ஒரு போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார். அதில் வெல்லுவான் புகழ் அள்ளுவான் என்ற கேப்ஷனுடன் விரைவில் ஆயிரம் திரையரங்குகளில் அகிலமெங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களிடம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆளவந்தான் வெளியான போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் படத்தின் மேக்கிங், டெக்னாலஜி குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் ரீ-ரிலீஸாகும் ஆளவந்தான் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆளவந்தான் படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

  English summary
  Kamal Haasan starrer Aalavandhan was well received by the fans. Producer Kalaipuli S Thanu has announced that this film will be re-released in thousand theaters soon.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X