கமலின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா...இதை எதிர்பார்க்கவேயில்லையே

சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. 420 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

ரஜினியின் 2.ஓ படத்திற்கு பிறகு தமிழில் இதுவரை அதிக வசூல் செய்த படமாக விக்ரம் இடம்பிடித்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் எந்த தமிழ் படமும் செய்யாத வசூல் சாதனையை விக்ரம் நிகழ்த்தி காட்டி உள்ளது.விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சுர்யா உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியிடப்பட்டது. விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் கமல், இந்தியன் 2 படத்தின் வேலைகளை துவக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஆண்டு இறுதியில் தான் இந்தியன் 2 படத்தின் வேலைகளை துவக்க போகிறார்களாம். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். கமல் - அனிருத் காம்போ மீண்டும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

கமலின் அடுத்தபடம் தேவர்மகன் 2 ஆ

கமலின் அடுத்தபடம் தேவர்மகன் 2 ஆ

இந்நிலையில் சமீபத்தில் டிவி ரிலியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல், அடுத்ததாக தான் மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படம் தேவர்மகன் 2 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் தான் இவரா

அவர் தான் இவரா

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராகவும், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் மகேஷ் நாராயணன். மேலும் மகேஷ் நாராயணன் ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக 50 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் தான் கமலை இயக்க போகிறார்

இவர் தான் கமலை இயக்க போகிறார்

மகேஷ் நாராயணின் முதல் திரைப்படமான Take-Off இந்திய மருத்துவ செவிலியர்கள் 2014 ஆம் ஆண்டில் ஈராக் கலவரத்தில் மாட்டிக்கொண்டதை, உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் அட்டகாசமான படைப்பாக அமைந்திருந்தது. இந்த படம் அவருக்கு உலகளவில் பெரும் அங்கீகாரத்தையும் பல விருதுகளையும் பெற்று தந்தது. மேலும் இந்தியளவிலும் உலகளவிலும் நிறைய திரைவிழாக்களில் கலந்து கொண்டது. அவரது இரண்டாவது திரைபடமான 'C U SOON' தனித்த கதைசொல்லல் மற்றும் நேர்த்தியான படைப்பாக பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இசையமைப்பாளர் இவரா

இசையமைப்பாளர் இவரா

விக்ரம் படத்தின் ஷூட்டிங்கின் போது, கமலை மகேஷ் நாராயணன் சந்தித்திருந்த போட்டோ செம வைரலாகி இருந்தது. இந்நிலையில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக சுசின் ஷ்யாம் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்னங்க...செம லிஸ்டா இருக்கு

என்னங்க...செம லிஸ்டா இருக்கு

சுசின் ஷ்யாம், 2018 இல் வரதன் மற்றும் 2019 இல் கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமடையத் தொடங்கினார். அதன்பிறகு, வைரஸ் (2019), அஞ்சம் பத்திரா (2020), கப்பேலா (2020), டிரான்ஸ் (2020), கிலோமீட்டர்ஸ் & கிலோமீட்டர்ஸ் (2020), மாலிக் (2021), குருப் (2021) மற்றும் மின்னல் முரளி (2021) இறுதியாக மம்முட்டி நடிப்பில் அமல் நீரத் இயக்கிய பீஷ்ம பர்வம் (2022) போன்ற பல மலையாளப் படங்களில் பணியாற்றியவர்.

 மீண்டும் இளைஞர்களுடன் கமல்

மீண்டும் இளைஞர்களுடன் கமல்

கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை அமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருதை சுஷின் பெற்றுள்ளார். மகேஷ் நாராயணன் Phantom Hospital எனும் படத்தை இந்தியில் தற்போது இயக்கி வருகிறார். மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் சுசின் ஷ்யாம் தற்போது கமல் படத்தில் இணைய உள்ளதால் மீண்டும் இளைஞர்களுடன் அமைக்க உள்ள புதிய கூட்டணியும் பிரம்மாண்ட வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X