»   »  கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran

கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களை அடுத்து கமல் ஹாஸன் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் சபாஷ் நாயுடு படத்தை துவங்கி பாதியில் நிற்கிறது. விஸ்வரூபம் 2 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படமும் பிரச்சனையை சந்திக்குமோ என்று ரசிகர்கள் அஞ்சுகிறார்கள்.

சபாஷ் நாயுடுவை முடித்த கையோடு தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறார் கமல் ஹாஸன்.

தலைவன் இருக்கிறான்

தலைவன் இருக்கிறான்

கமல் ஹாஸன் எழுதி, இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கிறான் படம் இந்தியில் அமர் ஹைன் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. அரசியல், நிதி மற்றும் நிழல் உலகம் பற்றிய த்ரில்லர் படமாம்.

அரசியல்

அரசியல்

கமல் ஹாஸன் ட்விட்டர் மூலம் தமிழக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு வரும் நிலையில் தலைவன் இருக்கிறான் அறிவிப்பு வந்துள்ளது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கமல்

கமல்

தற்போது ட்வீட்டி வருவதற்கும், படத்திற்கும் தொடர்பு இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட தலைப்பு தான் தலைவன் இருக்கிறான் என்று கமல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

தலைவன் இருக்கிறான் பற்றி ஆளாளுக்கு ட்வீட்டி வருவதால் #ThalaivanIrukkiran என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

English summary
Kamal Haasan's next movie after Sabash Naidu is Thalaivan Irukiran. The new movie is a political thriller which covers finance and under world also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil