twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்சாரானது விஸ்வரூபம்... தமிழுக்கு யு/ஏ.... இந்திக்கு ஏ!!

    By Shankar
    |

    சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டது.

    இதன் தமிழ்ப் பதிப்புக்கு யு ஏ சான்றும், இந்திப் பதிப்புக்கு ஏ சான்றும் அளித்தனர். தமிழில் ஆட்சேபத்துக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே யுஏ சான்று அளிக்கப்பட்டது.

    கமல் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தின் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். அமேரிக்கா, அப்கானிஸ்தான் நாடுகளில் இதுவரை தமிழ்ப் படங்கள் ஷூட்டிங் நடக்காத இடங்களில் இந்தப் படம் உருவானது.

    நவீன ஒலி தொழில்நுட்பமான 3 டி ஒலியில் இப்படத்தை கமல் உருவாக்கியுள்ளார்.

    இந்தப் படத்தைப் பார்த்த ஹாலிவுட் நிபுணர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். அத்துடன் ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பையே இந்தப் படம் கமலுக்கு பெற்றுத் தந்துள்ளது.

    தமிழ், இந்தி மொழிகளில் நேரடியாக வெளியாகும் இந்தப் படம், தெலுங்கிலும் டப்பாகிறது.

    படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் சூழலில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர். தமிழ் பதிப்பை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு 'யு.ஏ.' சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்தி 'விஸ்வரூபம்' படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் காட்சிகள் எதையும் நீக்காமல் 'ஏ' சான்றிதழ் அளித்தனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது. டிசம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.

    English summary
    Kamal Haasan's Viswaroopam has been censored. The Tamil version of the film has got an ‘UA' certificate with cuts, while the Hindi version Viswaroop has got ‘A' certificate without any cuts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X