»   »  சொன்னா கேட்க மாட்டியா, மறுக்கா மறுக்கா அதையே செய்ற: பரணியை திட்டிய கமல்

சொன்னா கேட்க மாட்டியா, மறுக்கா மறுக்கா அதையே செய்ற: பரணியை திட்டிய கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் பிரச்சரதிற்கு கைகொடுக்கும் பாடல்கள்..!!

மதுரை: பிக் பாஸ் புகழ் பரணியை கமல் ஹாஸன் திட்டியுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தனது அரசியல் பயணத்தை நேற்று துவங்கியுள்ளார். மதுரையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

மக்கள் நீதி மையம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார்.

ஆசி

ஆசி

மேடையில் அமர்ந்திருந்த கமல் ஹாஸனை வாழ்த்த பலர் வந்தனர். யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது, முக்கியமாக பொத்து பொத்துன்னு காலில் விழவே கூடாது என்று கறாராக தெரிவித்துவிட்டார் கமல்.(அடடே ஆண்டவரே)

கமல்

கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் பரணி கமல் ஹாஸனின் கட்சியில் சேர்ந்துள்ளார். நேற்றைய கூட்டத்தின்போது மேடைக்கு வந்த பரணி கமலை பார்த்ததும் காலில் விழுந்துவிட்டார்.

திட்டு

திட்டு

யாரும் காலில் விழக் கூடாதுன்னு படிச்சு படிச்சு சொல்லிக்கிட்டு இருக்கிறேன், நீ வந்த வேகத்தில் என் காலில் விழுகிறாயா? இனிமேல் இப்படி செய்யாதே என்று கமல் பரணியை கடிந்துள்ளார்.

ஆண்டவர்

ஆண்டவர்

அரசியல்வாதிகளையும் சால்வையையும் பிரிக்க முடியாத நிலையில் கமல் புது ரூல்ஸ் போட்டுள்ளார். மேலும் அரசியல்வாதிகளும் சரி, தொண்டர்களும் சரி காலில் விழுவதை பார்த்து பார்த்து சலித்துப் போன தமிழக மக்கள் கமலின் புது உத்தரவை வரவேற்றுள்ளனர்.

English summary
Actor turned politician Kamal Haasan has scolded former Bigg Boss contestant Bharani when he touched the legend's feet at yesterday's meet in Madurai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil