»   »  ஹார்வர்டு பல்கலையில் உரையாற்றும் கமல்... முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

ஹார்வர்டு பல்கலையில் உரையாற்றும் கமல்... முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹார்வர்டு பல்கலையில் இந்தியாவின் வளர்ச்சி உரையாற்றும் கமல்...வீடியோ

சென்னை : அமெரிக்காவில் உள்ள, உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலையில் நடக்கும் 15-வது ஆண்டு இந்திய கருத்தரங்கில் நடிகர் கமல் உரையாற்ற இருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சி, இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும் பிரச்னைகள் குறித்தும் கமல் உரையாற்ற இருக்கிறார்.

ஹார்வர்டு பல்கலையில் இந்திய கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன் 15-வது ஆண்டு கருத்தரங்கு பிப்ரவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கில் தான் கமல் உள்ளிட்ட இந்தியக் குழுவினர் பேச உள்ளனர்.

Kamal to speech in harvard university

இதில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு, காங்கிரஸை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி, சந்திக்க வேண்டியிருக்கும் சவால்கள் குறித்து அவர்கள் உரையாற்ற உள்ளனர். கருத்தரங்கில் பங்கேற்கும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் இவர்கள் பதிலளிக்க இருக்கின்றனர்.

கருத்தரங்கில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில், தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ், பா.ஜ.க-வைச் சேர்ந்த, எம்.பி பூனம் மகாஜன், நடிகையும் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவின் தலைவருமான நடிகை திவ்யா ஸ்பந்தனா (எ) ரம்யா, பிரபல தொழிலதிபர் நிதின் பராஞ்ச்பே ஆகியோரும் பேச உள்ளனர்.

English summary
Kamalhaasan is to address in the world famous Harvard University, USA. The Indian seminar is conducted annually at Harvard University. Its 15th Annual Seminar will be held on February 10 and 11. In this seminar, the Indian team, including Kamal, will speak.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X