»   »  சபாஷ் நாயுடுவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் கமல் ஹாஸன்!

சபாஷ் நாயுடுவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்பட்டார் கமல் ஹாஸன்.

தூங்காவனம் படத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு பாத்திரத்தை விரிவாக்கி கமல் உருவாக்கியுள்ள திரைக்கதை இது.


பிரமானந்தம்

பிரமானந்தம்

இந்தப் படத்தில் கமலுடன் அவர் மகள் ஸ்ருதி முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். பிரமானந்தம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க கமலுடன் பயணிக்கும் பாத்திரம் அவருக்கு.


தாமதம்

தாமதம்

கடந்த மே 14-ம் தேதியே கமல் ஹாஸன் தன் குழுவினருடன் அமெரிக்கா செல்லவிருந்தார். ஆனால் தேர்தல் காரணமாக தனது பயணத்தைத் தள்ளி வைத்தார்.


திரைக்கதை வாசிப்பு

திரைக்கதை வாசிப்பு

அந்த இடைவெளியில் படக்குழுவினருடன் திரைக்கதை வாசிப்பு முகாமில் ஈடுபட்டார். ஸ்ருதிஹாஸன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். படத்தின் திரைக்கதையை ஒருவருக்கொருவர் படித்துக் காட்டிக் கொள்வதுதான் இந்த முகாமின் நோக்கம்.


புறப்பட்டாச்சு

புறப்பட்டாச்சு

இப்போது அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துவிட்டதால், படப்பிடிப்புக்காக திங்கள்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டனர்.
3 ஸ்க்ரிப்டுகள்

3 ஸ்க்ரிப்டுகள்

இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகிறது. நேரடிப் படம் என்பதால் மூன்று மொழிகளுக்கும் மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கமல் கூறுகையில், மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார். மூன்றையும் எடுத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டுவிட்டோம். இதற்கு மேல் தாமதம் செய்தால் அமெரிக்க படப்பிடிப்பு திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடும்," என்றார்.
English summary
Kamal Haasan and team Sabash Naidu is off to Los Angeles with three bounded scripts (Tamil, Telugu and Hindi).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil