என்னது...ஆண்டவருக்கு இத்தனை வில்லன்களா... வெளியான மிரட்டல் தகவல்
சென்னை : கமல் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் கிளான்ஸ் சமீபத்தில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மூன்று கட்ட ஷுட்டிங் முடிந்தது
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றனர். விக்ரம் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியிலும், இரண்டாம் கட்ட ஷுட்டிங் புதுச்சேரியிலும், மூன்றாம் கட்ட ஷுட்டிங் சென்னையிலும் நடத்தப்பட்டது.

இன்று நான்காம் கட்ட ஷுட்டிங்
இந்நிலையில் விக்ரம் படத்தின் நான்காம் கட்ட ஷுட்டிங் கோவையில் இன்று துவங்க உள்ளது. ஒரு மாதம் இங்கு ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம். அதோடு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாம். இந்த படத்தை 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதான் ஹைலைட்
நான்காம் கட்ட ஷுட்டிங்கின் பெரும்பாலான சீன்களில் கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்க போகிறார்களாம். கதைப்படி மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு 3 ஜோடிகள். பகத் ஃபாசிலின் காதலியாக தான் காயத்ரி நடிக்கிறாராம்.

இத்தனை வில்லன்களா
லேட்டஸ்ட் தகவலாக விக்ரம் படத்தில் கமலுக்கு மொத்தம் 7 வில்லன்களாம். வில்லனான விஜய் சேதுபதிக்கு 6 சகோதரர்களாம். விஜய் சேதுபதியின் மூத்த சகோதரராக சம்பத் ராமும், இளைய சகோதரராக செம்பன் வினோத் ஜோஷும் நடிக்கிறார்களாம். மற்ற சகோதரர்கள் கேரக்டரில் நடிப்பது யார் என்ற விபரம் ஷுட்டிங் சமயத்திலேயே தெரிய வருமாம்.

சமஅளவு முக்கியத்துவம்
விக்ரம் படத்தில் ஹீரோவுக்கு கொடுப்பதை போலவே அனைத்து வில்லன்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். முதலில் ஐந்து வில்லன்கள் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது கமலுக்கு வில்லனாக 7 பேர் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











