வெளியேற போவது யார்... அரசியல் ஸ்டைலில் சொன்ன கமல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 21 வது நாளான இன்று மற்றொரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். கடந்த வாரம் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார்.

நாடியா சாங் வெளியேற்றப்பட்ட பிறகு பஞ்சதந்திரம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்கு முன் நடத்தப்பட்ட நாமினேஷன் ப்ராசசில் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு உதவுவதாக பஞ்சதந்திரம் டாஸ்க் வழங்கப்பட்டது.

காப்பாற்றப்பட்ட ஐக்கி

காப்பாற்றப்பட்ட ஐக்கி

நாமினேட் செய்யப்பட்ட 9 பேரில் இசைவாணி, தாமரை, அக்ஷரா, பாவனி ஆகிய நான்கு பேரும் சேவ் செய்யப்படுவதாக கமல் நேற்றே அறிவித்து விட்டார். இந்த சந்தோஷத்தை தாமரையும், இசைவாணியும் ஆடி, பாடி கொண்டாடினர். மீதமுள்ள 5 பேரில் ஐக்கி பெர்ரி காப்பாற்றப்படுவதாக இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோவில் கமல் கூறியுள்ளார்.

நிரூப் – பிரியங்கா சண்டை

நிரூப் – பிரியங்கா சண்டை

இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் ஐக்கி பெர்ரி காப்பாற்றப்படுவதாகவும், இரண்டாவது ப்ரோமோவில் பிரியங்கா, நிரூப்புடன் சண்டை போடுவதாகவும் காட்டப்படுகிறது. நிரூப்பிடம் உள்ள நாணயத்தை வைத்து அவன் ஏன் அபிஷேக்கை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என கோபமாக கேட்கிறார் பிரியங்கா. இதனால் நிரூப், பிரியங்கா இடையே சண்டை துவங்கி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மக்கள் தீர்ப்பை வணங்குவேன்

மக்கள் தீர்ப்பை வணங்குவேன்

இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல், எனக்கு அங்கிருந்து சேதி வந்து விட்டது. இந்த இருவரில் வெளியேற போகிறவர் யார் என்பதை மக்கள் தீர்ப்பாக அளித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவது எனக்கு வழக்கம். அதை நம்பிக் கொண்டிருக்கிறேன். என்றும் நம்புவேன் என்கிறார்.

வெளியேற போவது யார்

வெளியேற போவது யார்

கமல் பேசுவதை பயம் கலந்த சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் சின்னப் பொண்ணு. அதே சமயம் அபிஷேக், இறுக்கமான முகத்துடன் டென்ஷனாக பார்த்துக் கொண்டிருப்பதாக ப்ரோமோ அமைக்கப்பட்டுள்ளது. அபிஷேக், சின்ன பொண்ணு இருவரில் யார் இன்று வெளியேற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

அரசியல் ஸ்டைல்

அரசியல் ஸ்டைல்

அரசியல் கலந்து, தனக்கே உரிய ஸ்டைலில், இந்த வாரம் வெளியேற போகிறவர் பற்றிய அறிவிப்பை கமல் அறிவிக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அரசியல் சார்ந்த விஷயங்கள் பற்றி கமல் ஏதாவது சொல்வாரா என காத்துக் கொண்டிருப்பவர்களிடம் இந்த ப்ரோமோ வரவேற்பை பெற்றுள்ளது.

அப்பாடா போய் விட்டார்

அப்பாடா போய் விட்டார்

இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு ரசிகர்கள் பலரும், அபிஷேக் நேற்று இரவே வீட்டுக்கு போய் விட்டார். அவர் போய் விட்டால் யார் கன்டென்ட் கொடுப்பது என நினைக்கிறீர்களா. அது தான் நம்ம அக்கா பிரியங்கா இருக்காங்களே கன்டென்ட் கொடுக்க என தெரிவித்துள்ளது. இன்னும் சிலர், அப்பாடா...ஒருவழியாக அபிஷேக் வெளியே போய்விட்டார். இனி நிம்மதியாக ப்ரோமோ பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அபிஷேக்கை வைத்து மீம்ஸ்

அபிஷேக்கை வைத்து மீம்ஸ்

அபிஷேக்கை வைத்து மீம்ஸ் உருவாக்கி உள்ள பல நெட்டிசன்கள், ப்ரோமோவில் வர வேண்டும் என்று தானே ஆசைப்பட்டாய். இந்த கடைசி ப்ரோமோ பார்த்துக்கோ என கிண்டல் செய்துள்ளனர். ப்ரோமோல வரணும்னு நீ பண்ணின காரியம் இப்போ உனக்கே பேக்ஃபயரா மாறிடுச்சே என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X