twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல், விஜய், அஜித், சூர்யா.. இவங்க 4 பேரும் சேர்ந்து ஆட்சி அமைக்கணும்.. இது கங்கை அமரன் அரசியல்!

    |

    சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யா இணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்து ஆட்சி அமைக்க வேண்டும் என பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    தனியார் யூடியூப் சேனல்களில் தொடர்ந்து பேட்டியளித்து டிரெண்டாகி வருகிறார் கங்கை அமரன். சில நேரங்களில் கண்டபடி பேசி சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளார்.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 4 பேர் சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என இவர் பேசி இருப்பது டிரெண்டாகி வருகிறது.

    அரசியலில் ஈடுபாடு

    அரசியலில் ஈடுபாடு

    இசையமைப்பாளர் கங்கை அமரன் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜக கட்சியை சேர்ந்த இவர், தனது பேட்டிகளில் அரசியலை எப்போதுமே முன் வைத்து பேசி வருகிறார். அது சில நேரம் சில சர்ச்சைகளையும் கிளப்பி விடுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    கமல், விஜய், அஜித்

    கமல், விஜய், அஜித்

    மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நடிகர் கமல்ஹாசன், விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் நடிகர் விஜய், அரசியல் ஆசையே வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் நடிகர் அஜித் ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக இணைந்து ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இவர்கள் மூவரும் ஒன்றாக ஆட்சி நடத்தினால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றும் அந்த பேட்டியில் கங்கை அமரன் பேசி உள்ளார்.

    சூர்யாவையும் சேர்த்துக்கோங்க

    சூர்யாவையும் சேர்த்துக்கோங்க

    கமல், விஜய், அஜித் மட்டுமின்றி தற்போது சூர்யாவும் சமூக நலனுக்காக பல விஷயங்களை செய்து வருகிறார். அவரையும் அந்த கட்சியில் சேர்த்து விடுங்கள், நான்கு பேரும் சேர்ந்து மக்களுக்கு நல்லது பண்ணட்டும் என்றும் தன் இஷ்டத்துக்கு வேடிக்கையாக பேசியுள்ள பேட்டி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

    நல்ல எண்ணம்

    நல்ல எண்ணம்

    இந்த நான்கு பேருக்குமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற மகத்தான எண்ணம் இருக்கிறது. அவர்கள் வலது சாரியாக இருந்தாலும் சரி இடது சாரியாக இருந்தாலும் சரி நல்லது செய்ய ஒன்றாக இணைந்து வரட்டுமே என்றும் தனது ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், பாஜக அப்போதும் அவர்களுடன் கூட்டணி வைக்காது. அது, தனித்து நிற்கும் என்றும் தனது கட்சியின் எண்ணத்தையும் முன் வைத்திருக்கிறார் கங்கை அமரன்.

    கங்கை அமரனுக்கு அந்த பதவி

    கங்கை அமரனுக்கு அந்த பதவி

    கமல் முதல்வராக இருந்து செயல்படட்டும், விஜய் நிதியமைச்சராக இருக்கட்டும், கஜானாவில் காசு இல்லையென்றால், தனது சொந்த காசை போட்டாவது நல்ல திட்டங்களை செய்து விடுவார் என்று ஜாலியாக பேசிய கங்கை அமரன், தனக்கு அறநிலையத்துறையை மட்டும் கொடுத்துடுங்கப்பா என்றும் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

    Recommended Video

    Ilayaraja ராஜ்யசபா M.P-யாக நியமனம்... மகிழும் தமிழகம் *Kollywood | Filmibeat Tamil
    விஜய் அஜித் இணைந்து

    விஜய் அஜித் இணைந்து

    மேலும், அவர் இப்படி நடந்தா நல்லா இருக்கும்னு நான் ஆசைத்தான் பட முடியும். என்ன செய்யணும், செய்யக் கூடாது என்பதை முடிவு செய்வது அவர்கள் கையில் தான் இருக்கிறது என்றும் கூறி அழகாக எஸ்கேப் ஆகி விட்டார். சில நாட்களுக்கு முன்னர் மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மற்றும் அஜித் ஒன்றாக இணைந்து பான் இந்தியா படத்தை பண்ணினால் நல்லா இருக்கும் என்றும் கங்கை அமரன் கொளுத்திப் போட்டது காட்டுத்தீ போல பற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது

    English summary
    Gangai Amaran's recent interview speech goes trending in social media, he wishes Kamal, Vijay, Ajith and Suriya will join hands in politics and lead the State.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X