»   »  இனி புதிய படங்கள் நடிகர் சங்க வளாகத்திலிருந்து தொடங்க வேண்டும்! - கமல் ஹாஸன்

இனி புதிய படங்கள் நடிகர் சங்க வளாகத்திலிருந்து தொடங்க வேண்டும்! - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனி புதிய படங்களின் தொடக்க விழாக்களை நடிகர் சங்க வளாகத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது என் ஆசை என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார்.

கமல் ஹாஸன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கும் புதிய படமான சபாஷ் நாயுடு படத் தொடக்க விழா இன்று காலை நடிகர் சங்க வளாகத்தில் நடந்தது.


இளையராஜா

இளையராஜா

அப்போது, படத்தின் தலைப்பு மற்றும் டிசைனை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தத் தலைப்பை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டார்.


பங்கேற்றோர்

பங்கேற்றோர்

‘சபாஷ் நாயுடு' படப்பூஜையில் கமல், ஸ்ருதிஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்திக், பொன்வண்ணன், பாக்யராஜ், இளையராஜா, கே.எஸ்.ரவிக்குமார், பிரபு, கிரேஸி மோகன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கமல் பேச்சு

கமல் பேச்சு

பின்னர் கமல் பேசும்போது, "என்னுடைய புதிய படத்தின் பூஜையை நடிகர் சங்க வளாகத்தில் நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. இதைப்போன்று இன்னும் நிறைய படங்கள் இங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதே எனது ஆசை. அது நடக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
வாடகை

வாடகை

நடிகர் சங்க வளாகத்தில் தனது படத்தின் பூஜையை நடத்தியதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக நடிகர் சங்கத்துக்கு கமல் வழங்கினார்.


லைகா ஒரு கோடி

லைகா ஒரு கோடி

மேலும், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ‘லைக்கா நிறுவனம்' ரூ.1 கோடி வழங்கியுள்ளது.


இப்படத்தை லைக்கா நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
English summary
Kamal Hassan has expressed his wish to launch all the new movies from Nadigar Sangam campus.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil