தவறான ஃபோட்டோவை பதிவிட்ட கமல்... ஆண்டவரை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்

சென்னை : கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படம் பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் விரைவில் காரைக்குடியில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். இந்த படத்தில் கமலுக்கு 5 வில்லன்களாம். இந்த படத்தில் கமலின் மகனாக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். இதில் கமல் பார்வையற்றவர் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

3 வயதில் ஜெசிக்காவுக்கு இப்படி ஒரு நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்

பாராட்ட தவறாத கமல்

பாராட்ட தவறாத கமல்

படங்களில் பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருப்பவர் கமல். அவ்வப்போது நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் தொடர்பாகவும் சோஷியல் மீடியாவில் கருத்து பதிவிடக் கூடியவர். அதே போல் திறமையானவர்களை பாராட்டவும் கமல் ஒரு போதும் தவறுவதில்லை.

சார்பட்டா பரம்பரைக்கு பாராட்டு

சார்பட்டா பரம்பரைக்கு பாராட்டு

அப்படி சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்களின் கேரக்டராகவே வாழ்ந்திருந்தனர். இந்த படத்தை பாராட்டாத பிரபலமே இல்லை என்னும் அளவிற்கு பாராட்டு மழை குவிந்தது. இந்த படக்குழுவினரை அழைத்து கமல் பாராட்டினார்.

பா.ரஞ்சித்தை பாராட்டிய கமல்

பா.ரஞ்சித்தை பாராட்டிய கமல்

1970 களில் நடப்பது போன்று, பாக்சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சார்பட்டா பரம்பரை. எப்போதாவது தான் இப்படி பட்ட படம் வரும் என பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினரை கமல் மனம்திறந்து பாராட்டினார்.

நீரஜ் குமாருக்கு பாராட்டு

நீரஜ் குமாருக்கு பாராட்டு

இதைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்றுள்ள நீரஜ் குமாரை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். நாடே அவரை பற்றி தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறது. அப்படி கமலும் அவரை பாராட்டி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

வரலாறு படைத்த நீரஜ் குமார்

வரலாறு படைத்த நீரஜ் குமார்

கமல் தனது ட்வீட்டில், நீரஜ் சோப்ரா வரலாற்றை உருவாக்கி உள்ளார். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று ஒவ்வொரு இந்தியனின் கனவையும் நினைவாக்கி விட்டார். அவருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டார்.

கமல் செய்த தவறு

கமல் செய்த தவறு

வாழ்த்தை பதிவிட்ட கமல், நீரஜ் சோப்ராவின் ஃபோட்டோவிற்கு பதிலாக சிவ்பால் சிங்கின் ஃபோட்டோவை தவறுதலாக மாற்றி பதிவிட்டார். இதனை கவனித்த நெட்டிசன்கள் உடனடியாக ட்ரோல் செய்ய துவங்கினர். தான் தவறான ஃபோட்டோவை பதிவிட்டதை பின்பு தான் கமல் கவனித்துள்ளார்.

ட்வீட்டை நீக்கிய கமல்

ட்வீட்டை நீக்கிய கமல்

இதனால் உடனடியாக தனது ட்வீட்டை நீக்கி விட்டார். மீண்டும் சரியான ஃபோட்டோவை பதிவிட்டு, அத்துடன் மீண்டும் வாழ்த்தும் பதிவிட்டார். ஆனால் அதற்குள் கமலின் முந்தைய பதிவை பலர் ட்ரோல் செய்ததால், அது இணையத்தில் வேகமாக பரவியது.

Recommended Video

Bigg Boss Snehan - Kanika Ravi Wedding | Kamal Hassan தலைமையில் Snehan திருமணம்
ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

இதனை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். என்ன ஆண்டவரே இப்படி பண்ணீட்டிங்களே என்றும், ஆண்டவரே ஆனாலும் தவறும் செய்வது இயல்பு தானே என சிலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X