For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெற்றி தொடரட்டும் சகோதரரே...வாழ்த்திய இளையராஜா...பதிலுக்கு கமல் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

  |

  சென்னை : விக்ரம் படத்தின் வெற்றியால் உற்சாகத்துடன் கமல் காணப்படும் நிலையில், அவரை இளையராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளார். அதற்கு கமலும் அன்புடன் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

  1986 ம் ஆண்டு கமல் நடித்து வெளியான விக்ரம் படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். இந்தபடத்தின் பாடல்கள் மெகா ஹிட்டாகின. குறிப்பாக விக்ரம் தீம் மியூசிக் மற்றும் டைட்டில் சாங்கை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. இந்த டைட்டில் டிராக்கை சமீபத்தில் ரிலீசான விக்ரம் படத்திலும் அனிருத் பயன்படுத்தி இருந்தார்.

  விக்ரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது. கிட்டத்தட்ட 400 கோடிகளை இந்த படம் இதுவரை வசூல் செய்துள்ளது. பல படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் யாரும் செய்யாத வசூல் சாதனையை கமல் செய்துள்ளார்.

   விக்ரம் படத்தில் தொந்தி காட்டி நடிக்க இதுதான் காரணம்...விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்! விக்ரம் படத்தில் தொந்தி காட்டி நடிக்க இதுதான் காரணம்...விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்!

  கமலின் தொடர் தோல்வி

  கமலின் தொடர் தோல்வி

  கடந்த சில ஆண்டுகளாக கமலுக்கு குறிப்பிடத்தகுந்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இவர் நடித்த இந்தியன் 2 பல பிரச்சனைகளால் பாதியில் நின்றது. தற்போது வரை இந்த படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்படவில்லை. நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. சட்டசபை தேர்தலிலும் கமலுக்கு தோல்வி தான் கிடைத்தது.

  நீண்ட காலத்திற்கு பின் வெற்றி

  நீண்ட காலத்திற்கு பின் வெற்றி

  இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியால் கமல் செம உற்சாகமாகி உள்ளார். இதை கொண்டாடும் விதமாக தான் லோகேஷிற்கு கார், அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு பைக், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச், விக்ரம் டீமுக்கு பிரியாணி விருந்து என வழங்கி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரையும் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்.

  கமலே சொன்ன தகவல்

  கமலே சொன்ன தகவல்

  சமீப காலங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்த தன்னுடைய படம் விக்ரம் தான் என கமலே வியப்பாகவும் ஆச்சரியமாகவும் கூறி உள்ளார். விக்ரம் தந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க தீவிரமாக களமிறங்கி உள்ளார். இதுவரை வெளியான தகவல்களின்படி பார்த்தால் கமலிடம் கைவசம் 10 படங்கள் உள்ளது.

  விக்ரம் படத்திற்கு பாராட்டு

  விக்ரம் படத்திற்கு பாராட்டு

  பலரும் விக்ரம் படத்தையும், அது பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றியையும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இசைஞானி இளையராஜாவும் விக்ரம் பட வெற்றிக்காக கமலை பாராட்டி உள்ளார். சமீபத்தில் இளையராஜாவும், கமலும் சென்னையில் உள்ள தியேட்டரில் கேஜிஎஃப் 2 படம் பார்த்த போட்டோக்கள் செம வைரலாகின.

   கமலை வாழ்த்திய இளையராஜா

  கமலை வாழ்த்திய இளையராஜா

  இப்போது கமலின் விக்ரம் படத்தை பாராட்டிய இளையராஜா தனது ட்விட்டர் பதிவில், 'வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்.' என்று கூறியுள்ளார்.

  கமல் சொன்ன பதில்

  கமல் சொன்ன பதில்

  இதற்கு, 'நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல தொடர விழையும் உங்கள் நான்' என கமலும் பதில் ட்வீட் போட்டுள்ளார். இவர்களின் இந்த பாச உரையாடலை பார்த்து, இவர்களுக்குள் இப்படி ஒரு சகோதர பாசமா என அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

  English summary
  For Vikram movie's grand success Ilaiyaraaja wished Kamalhaasan in twitter. He wished as brother that success and happy will continue. Kamal also replied for Ilaiyaraaja in twitter. His word are really attracted everyone. Fans give lots of likes to both of this legends tweet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X