புர்ஜ் கலீஃபாவில் திரையிடப்பட்ட விக்ரம் டிரைலர்...செம ஸ்டைலாக ரசித்த கமல்
துபாய் : விக்ரம் படத்திற்கு நடத்தப்பட்டு வரும் சர்வதேச அளவிலான ப்ரொமோஷன் ஒட்டு மொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் விக்ரம் பட டிரைலர் திரையிடப்பட்டுள்ளது.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் 5000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தை கமல் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் தாண்டி சர்வதேச அளவிலான ரசிகர்களும் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

நாயகன் மீண்டும் வர்றார்
சூர்யா பற்றிய தகவல், கேரக்டர் பெயர்கள், டைட்டில் டிராக் என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு இப்போதே படம் பார்க்க வேண்டும் என ஆசையையும், படத்தின் அப்படி என்ன தான்ம்ப்பா இருக்கு என்ற ஆர்வத்தையும் தூண்டி வருகின்றனர் விக்ரம் படக்குழுவினர். நான்கு ஆண்டுக்கு பிறகு கமலின் கம்பேக்கை கொண்டாடும் விதமாக நாயகன் மீண்டும் வர்றார் என்ற டைட்டில் டிராக் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

இவர் தான் விக்ரமா
விக்ரம் படத்தில் கமல், அருண்குமார் என்ற ரா ஏஜன்ட் ரோலில் நடிப்பதாகவும், சந்தான தேவன் ரோலில் விஜய் சேதுபதியும், அமர் ரோலில் ஃபகத் ஃபாசிலும் நடிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைட்டில் ரோலான விக்ரம் ரோலில் யார் நடித்துள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. லேட்டஸ்ட் தகவலாக சூர்யா தான் விக்ரம் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு ப்ரொமோஷனா
சமீபத்தில் ஃபிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டு, அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து வெளிநாடு, உள்நாடு, டிவி நிகழ்ச்சி என ஒன்று விடாமல் கடந்த 10 நாட்களாக அதிதீவிர ப்ரொமோஷனில் ஈடுபட்டு வருகிறார் கமல். இதுவரை கமலின் எந்த படத்திற்கு இல்லாத அளவிற்கு விக்ரம் படத்திற்கு சர்வதேச அளவில் ப்ரொமோஷன் நடைபெற்று வருகிறது.

புர்ஜ் கலீஃபாவில் விக்ரம் டிரைலர்
இதன் அடுத்த கட்டமாக உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில், நேற்று இரவு விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பரில் பாலிவுட் படமான 83 படத்தின் டிரைலர் இந்த கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை கமல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டையிலாக வந்த கமல்...ஆர்ப்பரித்த ரசிகர்கள்
கருப்பு நிற கோட் ஷுட்டில் செம ஸ்டையிலாக துபாய் வந்த கமல், புர்ஜ் கலீஃபாவில் திரையிடப்பட்ட விக்ரம் டிரைலரை செம கெத்தாக சோஃபோவில் அமர்ந்து ரசித்தார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி தங்களின் மொபைல் போனில் படம் பிடித்தபடி, விக்ரம் டிரைலரை கண்டு ரசித்தனர். டிரைலரின் முடிவில் விக்ரம் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து, கூச்சலிட்டனர். அவர்கள் முன் தோன்றிய கமல், உற்சாகமாக ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.


Click it and Unblock the Notifications











