»   »  6 சர்வதேச விருதுகள் வென்ற கனவு வாரியம்... ஷாங்காய் விழாவுக்கும் தேர்வு!

6 சர்வதேச விருதுகள் வென்ற கனவு வாரியம்... ஷாங்காய் விழாவுக்கும் தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவின் ரெமி விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற அருண் சிதம்பரத்தின் கனவு வாரியம் திரைப்படம், ஷாங்காய் திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 11 முதல் 19 வரை சீனாவில் ஷாங்காய் நகரில் இந்த விழா நடக்கிறது.

சில தினங்களுக்கு முன்புதான் இந்தப் படம் சிறந்த படத்துக்கான உலகப் புகழ் பெற்ற ‘ப்ளாட்டினம் ரெமி' விருதை வென்றது.

Kanavu Vaariam selected for Shanghai film festival

இப்படத்தில் இடம்பெற்ற கல்லா மண்ணா.. என்ற பாடல் வெள்ளி ரெமி விருதனை வென்றது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச
திரைப்பட விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் 'கனவு வாரியம்' திரைப்படம் தேர்வானது. படத்தின் இயக்குநர் அருண் சிதம்பரத்திற்கு இந்த விருதுகளை கடந்த ஏப்ரல் மாதம் நேரில் போய் பெற்றுக் கொண்டார்.

மேலும் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெற்ற ‘17 வது பேர் போன்ஸ் சர்வதேச திரைப்பட விழா'விலும், ஏப்ரல் 23-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்பட
விழா'விலும், பிப்ரவரி 9 முதல் 13 வரை நடைபெற்ற மத்திய அரசால் நடத்தப்படும்
'தேசிய அறிவியல் திரைப்பட விழா'விலும் (National Science Film Festival) 'கனவு வாரியம்' திரைப்படம் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் ஷாங்காய் திரைப்பட விழாவுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் அருண் சிதம்பரம் கூறுகையில், "அறிமுக இயக்குநரான எனக்கு இந்த விருதகள் பெரிய ஊக்கம் தருகின்றன. எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் இந்த விருதுகள் புது நம்பிக்கையை பாய்ச்சி இருக்கிறது. இதை பரிசளித்த கடவுளுக்கும், இத்திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. பொறுமை காத்த என் மனைவிக்கும், என் மகன் எழிலுக்கும் நன்றி.
இந்த விருதுகள் தயாரிப்பாளர்களும், என் அம்மா பூங்கோதை சிதம்பரமும் இல்லை
என்றால் சாத்தியமாகி இருக்காது," என்றார்.

அருண் சிதம்பரம், மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் உடற்பயிற்சியாளராக இருந்த 'ஆணழகன்' சிதம்பரத்தின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Arun Chidambaram's Kanavu Variam movie has selected for screening at Shanghai film festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil