ரஜினியிடம் அந்த பண்பை கற்றுக்கொண்டேன்..நெகிழ்ச்சியுடன் பதிலளித்த நடிகர் கிச்சா!

சென்னை : கன்னட திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் கிச்சா, ரஜினிகாந்திடம் அந்த உயரிய பண்பை கற்றுக்கொண்டதாக பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி உள்ள திரைப்படம் 'விக்ராந்த் ரோணா'. இப்படத்தை நடிகர் கிச்சா சுதீப் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரித்து, நடித்துள்ளார்.

இப்படத்தில் நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கன்னட நடிகர் கிச்சா சுதீப்

கன்னட நடிகர் கிச்சா சுதீப்

கன்னட சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் முன்னணி நட்சத்திர நாயகராகவும் திகழும் நடிகர் கிச்சா சுதீப், தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சியமானது 'நான் ஈ' படத்தில் தான். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமளலி இயக்கி இருந்தார். இதையடுத்து, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் உட்பட பிறமொழி ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

விக்ராந்த் ரோணா

விக்ராந்த் ரோணா

கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் பல மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கிச்சா சுதீப் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து விக்ராந்த் ரோணா படத்தை தயாரித்துள்ளன.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

பான் இந்திய திரைப்படமாக ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் ஜூலை 28ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 'விக்ராந்த் ரோணா' திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டுள்ளார். மிரட்டலாக வெளியாகி உள்ள இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கன்னட சினிமாவின் வளர்ச்சி

கன்னட சினிமாவின் வளர்ச்சி

இந்நிலையில்,நடிகர் கிச்சா சதீப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக விளக்கம் அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமா உலகையை திரும்பிபார்க்க வைத்துள்ளது. கன்னட சினிமாவின் வளர்ச்சி பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சூப்பர் என்பது போல செய்கையால் பதிலளித்தார்.

ரஜினியின் தீவிரரசிகன்

ரஜினியின் தீவிரரசிகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரரசிகன் நான், அவருடைய படங்களைப் பார்த்து மிகவும் பிரம்மித்து இருக்கிறார். ரஜினியை நேரில் பார்த்தபோது, அவ்வளவு பெரிய ஸ்டார் என்று இல்லாமல், மிகவும் தன்னடக்கத்துடன் இருந்தார். அவரின் இமாலய வளர்ச்சிக்கு அந்த தன்னடக்கம் தான் காரணம் அது என்னை மிகவும் கவர்ந்ததால், முன்பை விட தீவிர ரசிகனாகி விட்டேன்.

நீங்க நல்லவரா ? கெட்டவரா?

நீங்க நல்லவரா ? கெட்டவரா?

'விக்ராந்த் ரோணா' திரைப்படத்தில் போலீசாக நடித்திருக்கிறீர்கள் நீங்க நல்லவரா ? கெட்டவரா? என நாயகன் ஸ்டைலில் ஒரு செய்தியாளர் கேட்க, நீங்கள் போலீசை பற்றி என்ன நினைக்கிறீர்கள், சிக்னலில் ஒரு போலீஸ் உங்களை பிடித்து எதுவுமே வாங்காமல் அனுப்பிவிட்டால் நல்லவர்... ஏதாவது வாங்கி கொண்டு அனுப்பினால் கேட்டவர். அப்படித்தான் இதுவும் படத்தை பார்த்து நான் நல்ல போலீசா.. கெட்ட போலீசானு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூலாக பதிலளித்தார் நடிகர் கிச்சா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X