twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழம்பெரும் கன்னட நாடக-சினிமா நடிகை சிந்தோடி லீலா மரணம்

    By Staff
    |

    Chindodi Leela
    பழம்பெரும் கன்னட நாடக நடிகையான சிந்தோடி லீலா மாரடைப்பால் மரணமடைந்தார்.

    அவருக்கு வயது 72. லீலாவுக்கு கணவர், ஒரு மகன் உள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென உடல் நிலை மோசமடைந்து அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    கரிபசவ ராஜேந்திரா நாடக கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் லீலா. கன்னட நாடக உலகில் தனக்கென தனி இடம் கொண்டிருந்தவர். குறிப்பாக வடக்கு கர்நாடகத்தில் இவரது நாடக நிறுவனத்தை அறியாதவர்களேக் கிடையாது.

    போலிசின மகளு என்ற நாடகம் லீலாவுக்கு பெரும் புகழ் தேடித் தந்ததாகும். இந்த நாடகம் பல வருடங்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கிட்டத்தட்ட 4500 ஷோக்கள் இந்த நாடகம் போடப்பட்டு அதற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    65 வயதைத் தாண்டியும் கூட தொடர்ந்து தனது நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் லீலா என்பது குறிப்பிடத்தக்கது.

    சில திரைப்படங்களிலும் லீலா நடித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X