twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதி படத்திற்கு 'அந்த கட்சி' இலவச விளம்பரம் கொடுக்கும் போல: காரணம்...

    By Siva
    |

    Recommended Video

    உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே | ஹன்சிகாவின் அடுத்த சர்ச்சை போஸ்டர்- வீடியோ

    சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்திற்கு நிச்சயம் இலவச விளம்பரம் கிடைக்கும் போன்று.

    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கண்ணே கலைமானே. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் படம் குறித்து உதயநிதி பேட்டி ஒன்றில் கூறியதாவது,

    தர்மதுரை

    தர்மதுரை

    நீர்பறவை படத்தை எடுத்ததில் இருந்து நானும், சீனு ராமசாமியும் அவ்வப்போது சந்தித்து பேசி வருகிறோம். தர்மதுரை படம் ஹிட்டான பிறகு அவரை அணுகி எனக்கு ஏதாவது ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டேன். முதலில் கிரைம் த்ரில்லர் கதையை சொன்ன அவர் பின்பு கண்ணே கலைமானே கதையை கூறினார்.

    தமன்னா

    தமன்னா

    இந்த படத்தில் ஹீரோயினுக்கு பெரிய ஸ்கோப் உள்ளது. அந்த கதாபாத்திரத்திற்கு தமன்னாவை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்க தோன்றவில்லை. இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்ததும் தமன்னா எனக்கு போன் செய்து நிஜமாகவே நீங்கள் இந்த படத்தை தயாரித்து நடிக்கிறீர்களா என்று கேட்டார். இந்த படத்தில் அவரின் நடிப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

    நீட்

    நீட்

    கண்ணே கலைமானே படத்தில் விவசாயிகள், ஆர்கானிக் விவசாயம், நீட் உள்ளிட்ட சில சமூக பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இது கதையில் திணிக்கப்பட்டது அல்ல. ஹீரோ கமலக்கண்ணன் ஆர்கானிக் விவசாயம் செய்பவர். அவரின் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் மேனேஜராக வருகிறார் ஹீரோயின் பாரதி. அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல், அதை சுற்றியுள்ளவர்கள் ஏற்கிறார்களா என்பது தான் கதை.

    இலவச விளம்பரம்

    இலவச விளம்பரம்

    ஹீரோ ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளோம். இந்த பிரச்சனை எல்லாம் கதையில் திணிக்கப்படுகிறதா என்று சீனு சாரிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை என்றார். (படத்தில் விவசாயிகள், நீட் பிரச்சனை பற்றி பேசப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.)

    நண்பர்

    நண்பர்

    சீனு என் நண்பர் தான் என்றாலும் படப்பிடிப்பின் முதல் நாளில் படப்படப்பாக இருந்தது. அவர் தன் படத்தில் நடிப்பவர்களை கொடுமைப்படுத்துவது இல்லை. அவர்களின் பிளஸ், மைனஸை புரிந்து கொண்டு வேலை வாங்குவார். அதே சமயம் அவருக்கு திருப்தி ஏற்படும் வரை கலைஞர்களை சும்மாவிட மாட்டார் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

    English summary
    Udhayanidhi Stalin's upcoming movie Kanne Kalaimaane has talked about some social issues like NEET. Looks like his movie will get free publicity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X