கன்னிமாடம் நாளை ரிலீஸ்.. வைரலாகும் ஸ்பாட்லைட் மேக்கிங் வீடியோ !
சென்னை : நாளை வெளியாக உள்ள கன்னிமாடம் படத்தின் ஸ்பாட்லைட் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றவர் தான் போஸ் வெங்கட். இவர் நடித்த மெட்டி ஒலி சீரியலை கொண்டாடாத வீடுகளே தமிழகத்தில் கிடையாது. இவர் பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிவாஜி படத்தில் வேலு. தலைநகரம் படத்தில் பாலு மற்றும் கோ படத்தில் கதிர்என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்காற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கென்று ஒரு தனி அடையாளம் மற்றும் தனி இடத்தை பிடித்துள்ளார் போஸ் வெங்கட். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார், இவர் இயக்கியுள்ள படம் தான் கன்னிமாடம் இந்த படம் நாளை வெளியாக உள்ளது.
கன்னி மாடம் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சாய தேவி, ஆடுகளம் முருகதாஸ், மைம் கோபி போன்ற பலர் நடித்துள்ளனர். ஹரி சாய் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார், இனியன் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஸ்பாட்லைட் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் மேக்கிங்யை அப்படியே ரசிகர்களுக்கு வழங்கியுள்ளனர். இதில் இயக்குனர் போஸ் வெங்கட்டின் உழைப்பு மிகவும் பாராட்ட வேண்டியது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு சீன்னும் நடித்து நடித்து காட்டியுள்ளார். மற்றும் ஸ்பாட்டில் பல உதவிகளையும் செய்துள்ளார், ஒரு இயக்குனர் இவ்வளவு வேலைகளையும் தன் வேலைப்போல எல்லாவற்றையும் செய்துள்ளார் போஸ் வெங்கட். அந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும் போது புரிகிறது அவருக்கு சினிமா மீது இருக்கும் அளவு கடந்த காதல் புரிகிறது.
நாளை வெளியாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது ஒரு வித்தியாசமான தலைப்பு, இயக்குனர் புதிது படத்தின் மேக்கிங் புதிது என்று புதியதோர் உலகம் தான் இந்த கன்னி மாடம். அதனால் நாளை முதல் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











